சூரிய மீன்
cūriya mīṉ
இந்தியக் கடல்களில் காணப்படும் சூரிய மீன்கள் மோலா மோலர் என்னும் இனத்தைச் சார்ந்தவை.
இந்தியக் கடல்களில் காணப்படும் சூரிய மீன்கள் மோலா மோலர் என்னும் இனத்தைச் சார்ந்தவை. தடித்த தோல்களும், முட்டை வடிவும் கொண்டவை. இம்மீன்கள் 3000 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்கின்றன. புதிய இளவுயிரிகள் சிறியனவாகவும், சாதாரண மீன்களைப் போல, நீள் வட்டமாகவும் காணப் படுகின்றன. சூரிய மீனின் வாய் சிறியதாகவும், பற்கள் இணைந்து தாடைக்கு ஒன்றாகவும், காணப்படுகின்றன. அடி வயிற்றெலும்பில் (pelvic fin) துடுப்புகள் காணப்படவில்லை. முதுகுத் துடுப்பும் (dorsal fin), மலவாய்த் துடுப்பும் (anal fin) செங்குத்தாக நீண்டுள்ளன. வால் பக்கத் துடுப்பு (caudal fin) சிறியதாகவும், பின் பக்கம் வளைந்ததாகவும் காணப்படும்.
பளபளக்கும் தோற்றத்தை உடைய இம்மீன்கள் சாம்பல், ஆலிவ் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஏறத் தாழ 1 டன் எடையுள்ள இவை 3 மீ. நீளம் வளரக் கூடியவை. வால் பக்கத் துடுப்பும், முதுகுத் துடுப்பும் இல்லாமல், தலை மட்டும் பெரியதாக உள்ளமையால், இவை தலை மீன் என்றும் பெயர் பெறும்.
கடல்களின் மேல் பகுதிக்கு வர விரும்பாத இம்மீன்கள் அமைதியான கால நிலையின் போது, சூரிய ஒளியின் தேவைக்காக மேல் நோக்கி வருகின்றன. சிறிய மீன்கள், ஜெல்லி, ஓட்டுடலிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. அரை வட்ட வடிவ உடலைக் கொண்டுள்ளமையாலும், வால் பக்கத் துடுப்பு இல்லாமையாலும், இது நீரோட்டத்தை எதிர்த்துச் செல்வதில்லை. இம்மீனின் மூளை மிகச் சிறியதாகவே காணப்படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இம்மீனின் தோல் 5–7 செ.மீ. வரை தடித்துள்ளது. இம்மீன்கள் ஈட்டி போன்ற கூரிய பொருள்களாலோ, குண்டுகளாலோ துளைக்க முடியாதவாறு கெட்டியான உடலமைப்புடன் காணப்படும். சில சமயங்களில், வலைகளில் பிடிபட்டால், பன்றியின் உறுமல் போல ஒலி எழுப்புகின்றன. —கோவி. இராமசுவாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 645)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wt7d62qn/
தமிழ்“சூரிய மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt7d62qn/APA
Oliyon Research. (2026). சூரிய மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wt7d62qn/MLA
"சூரிய மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt7d62qn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment