அண்டர்மகன் குறுவழுதியார்
aṇṭarmakaṉ kuṟuvaḻutiyār
சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் அண்டர் மகன் குறுவழுதி என்றும் குறிக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் அரசியற் பணிபுரிவோர் தம் அரசரின் சிறப்புப் பெயரைத் தம் பெயரோடு சார்த்தி வழங்கும் வழக்கம் உண்டு. இவர் பாண்டிய வேந்தரிடம் அரசியற் பணிபுரிந்த புலவர் எனலாம். அகநானூற்றில் இரண்டும் (150, 228), குறுந்தொகையில் ஒன்றும் (345), புறநானூற்றில் ஒன்றும் (346) ஆக நான்கு பாடல்கள் இயற்றியுள்ளார்.
புறநானூற்றுப் பாடலில் மகள் மறுத்தமையால் தோன்றிய போரில் விளையவிருக்கும் கொடுமையை நினைந்து, ‘இப்பெண்ணின் அழகு, போரில் இறந்தோர் நீங்க, மற்றவர்களும் அவர்களின் சுற்றத்தவர்களும் பேணுவாரின்றிப் பெரும்பாழ்படுமாறு செய்யும்’ என்று புலவர் ஏங்கியுள்ளார். குறுந்தொகைப் பாடல், பகலில் வந்தொழுகும் தலைவனைத் தோழி இரவு வருமாறு கூறும் பாங்கில் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. அகநானூற்றில் தோழி கூற்றுகளாக அமைந்த அகநானூற்றுப் பாடல்களில் ஒன்று நெய்தல் திணையிலும் மற்றொன்று குறிஞ்சித் திணையிலும் உள்ளது, நீர்நிலைகளில் நெய்தல் மலரும், குவளை மலரும் தனித்தனி மலர்ந்து விளங்குவதற்குக் கண்ணை உவமைகாட்டிக் ‘கனைத்த நெய்தல் கண்போல் மாமலர்’ என்றும், ‘கண் என மலர்ந்த மாஇதழ்க் குவளை’ என்றும் கூறியிருப்பது நயமிக்கதாம்.ந.சே.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 282)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmav5dsk/
தமிழ்“அண்டர்மகன் குறுவழுதியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wmav5dsk/APA
Oliyon Research. (2026). அண்டர்மகன் குறுவழுதியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wmav5dsk/MLA
"அண்டர்மகன் குறுவழுதியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wmav5dsk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment