அநந்தராமையர், இ.வை
anantarāmaiyar, i.vai
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இடையாற்று மங்கலத்தில் தோன்றி விளங்கிய ஒரு புலவர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இடையாற்று மங்கலத்தில் தோன்றி விளங்கிய ஒரு புலவர். பெற்றோர் தையலம்மாள், வைத்தீசுவர ஐயர் ஆவர். இளமையில் இவரைக் கல்வி கற்க அனுப்பாத தந்தையார், மருத்துவர் ஒருவரின் சொற்படி பின்னர் முறையாகக் கல்வி கற்க உதவி செய்தார். இவர், தமிழ் வடமொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளி, மயிலை பி.எசு. உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் தமிழாசிரியராக விளங்கினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிசெய்தார். தமிழ் பேரகராதி ஆசிரியர் குழுவிலும் இவர் உறுப்பினராக இருந்தார். இவர் கவிஞராகவும் விளங்கிப் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். வீரவன புராணத்தின் சிறப்புப்பாயிரம் இவர் செய்ததாகும்.
அநந்தராமையர், இ.வை.
இவர் சிறந்த பதிப்பாசிரியர். அக்காலத்தில் உ.வே.சா. பதிப்புப் பணிகளுக்கு இவர் துணையாக இருந்துள்ளார். கலித்தொகையை அதன் நச்சினார்க்கினியர் உரையோடு ஆராய்ந்து தம் அரிய குறிப்புகளுடன் பதிப்பித்துள்ளார். அருஞ்சொற்பொருள், ஒப்புமைப் பகுதி, சொற்குறிப்பு அகராதி போன்றவற்றால் இப்பதிப்பு ஆய்வாளர்க்குப் பயன்படும் சிறந்த பதிப்பாகத் திகழ்கிறது. களவழி நாற்பது, கைந்நிலை, ஐந்திணை எழுபது, ஏம்பல் முத்தையாசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 381)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wksw7yst/
தமிழ்“அநந்தராமையர், இ.வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wksw7yst/APA
Oliyon Research. (2026). அநந்தராமையர், இ.வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wksw7yst/MLA
"அநந்தராமையர், இ.வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wksw7yst/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment