வடமேற்கு இங்கிலாந்திலுள்ளதொரு நகரம்; இலங்காசயர் மாவட்டத்தின் தலைநகரம். இலண்டன் நகருக்கு 370 கி.மீ. வடமேற்கில் உள்ள இந்நகரம் இலூனே ஆற்றங்கரையொட்டி அமைந்துள்ளது. இலங்காசுடர் இலங்காசுடர் (Lancaster) நகரம் உரோமானியக் கோட்டையாக இருந்தது. நார்மானிய வெற்றியின்போது இது பாய்ட்டோ உரோசர் என்பாரின் வசமிருந்தது. பின்னர், கி.பி. 1266–இல் மூன்றாம் என்றி அரசரின் சொத்தாக இருந்த இம்மாநகர், அவர் மகன் எட்மண்டுக்குச் சொந்தமாயிற்று. சான்காண்ட்டு என்பார் கி.பி. 1362–இல் சாசனம் பெற்று இங்குக் கூட்டங்கள் நடத்தும் சிறப்புரிமைகனைப் பெற்றார். இலங்காசுடர் தியூக்கு (Duke) என்றி என்பாருக்கு இங்கிலாந்தின் அரசுரிமையை உறுதிப்படுத்தப் பாராளுமன்றம் கி.பி. 1399–இல் சட்டமியற்றியது. அவரே நான்காம் என்றி என்னும் பட்டத்துடன் இலங்காசுடர் மரபின் முதல் அரசரானார். அவர் கி.பி. 1399–இலிருந்து 1461 வரை இங்கிலாந்தை அரசாண்டார். நான்காம் என்றியின் மகனும், பேரனாகிய ஐந்தாம் என்றியும். ஆறாம் என்றியும் இலங்காகடர் மரபினைச் சார்ந்த இருவரும் இங்கிலாந்தின் முடிமன்னர்களாக ஆண்டனர். ஆறாம் என்றியின் மகன் இலங்காசுடர் மரபின் இறுதி அரசராவார். அவர் உரோசாப்பூச் சின்னப் போரின் போது கொல்லப்பட்டார். இலங்காசுடர் ஆற்றங்கரைத் துறைமுகம் செய்தொழில் உற்பத்தி மையம் அமையப்பெற்ற நகரம். பருத்தி, இரயான், பட்டுத் துணிகள் ஆகியவை இந்நகரில் உற்பத்தியாகும் சிறப்புப் பொருளாகும். இலைனோலியம், மரச்சாமான்கள், பீர், புத்தகத்துணி, பாய், பின்னல் ஆடைகள் போன்ற பிற பொருள்களும் இங்கு உற்பத்தியாகின்றன. இலங்காசுடரின் மக்கள்தொகை 1,20,914 ஆகும் (1981). இலங்காசுடர் என்னும் பெயரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான பென்சில்வேனியாவில் பிறிதொரு நகரம் உள்ளது. இந்நகரம் கோனெசுதோகா (Consetoga) ஆற்றங்கரையை ஓட்டியுள்ளது; பிலடெல்பியா நகருக்கு 104 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இதுவும் அமெரிக்காவிலுள்ள இலங்காசுடர் மாவட்டத்தின் தலைநகரமாகும். இப்பகுதியில் செருமானியர், மோரோவியர், ஆங்கிலேயர், இசுகாட்டியர், வேல்சியர், அயர்லாந்தார் போன்றோர் முதன்முதலில் குடியேறினர். இங்கிலாந்திலிருந்த இலங்காகடர் நகரத்தின் நினைவாக இதனை இலங்காசுடர் மாவட்டம் (கவுண்டி) என்னும் பெயரில் கி.பி. 1729–இல் அமைத்தனர். செல்வச் செழிப்புமிக்க கிராமங்களைச் சுற்றிலும் கொண்ட இலங்காசுடர், பல வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. புகையிலை, கோதுமை போன்றவை சிறப்பான உற்பத்திப் பொருள்கள், கிழக்கில் உருவாகியுள்ள பெருமைமிக்க பெரும் கால்நடைச் சந்தையாக இந்நகர் கருதப்படுகிறது. இலைனோலியம், தக்கை, கடிகாரங்கள், தொலைக்காட்சிக் குழல்கள், பொம்மைகள் போன்றவை செய்தொழிற் பொருள்கள். கோளத் திரளமைப்புகள், இயந்திரங்கள், கற்கண்டு, பருத்தி, பட்டு, உரோம ஆடைகள் போன்றவை ஏனைய உற்பத்திப் பொருள்கள். இலங்காசுடர் பகுதியின் மொத்த விற்பனைக் கூடமாகவும் சில்லறை வாணிகக் கூடமாகவும் இந்நகரம் விளங்குகிறது. குடியரசுத் தலைவர் சேம்சு புசானன் என்பாரின் வீட்லாந்து என்னும் வீடு இலங்காசுடரில் நினைவுச் சின்னமாக இருக்கிறது. இங்குப் பல கல்லூரிகளும் உள்ளன. இந்நகரின் மக்கள் தொகை 54,725 ஆகும்.