பாக்டீரியா
pākṭīriyā
பாக்டிரியாக்கள் தமிழில் 'நுண்மங்கள்' அல்லது 'நுண்ணுயிரிகள்’ என அழைக்கப்படுகின்றன.
பாக்டிரியாக்கள் தமிழில் 'நுண்மங்கள்' அல்லது 'நுண்ணுயிரிகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகையினவாக அமைந்துள்ளன. ஒருவகை, மணிதனுக்கு மிகவும் துணையாக அலைந்து நன்மை செய்து வருவன. மற்றொரு வகை, நோய்கள் உருவாவதற்குக் காரணமாயமைந்து
தீங்கிழைத்து வருவனவாகும். நன்மை தரும் பாக்டீரியாக்களைவிட தீமை உண்டாக்குபவையே அதிகமாகும்.
நன்மை தரும் பாக்டீரியா தாவர வகையைச் சார்ந்ததாகும். மண்ணில் மறையும் உயிரினங்களை, தாவரங்களை மண்ணோடு மண்ணாக மக்கச் செய்வன இத்தாவரங்களேயாகும். இத்தகைய பாக்டீரியாக்கள் ஒரே உயிரணுவால் உருவானவைகளாகும். கண்களால் பார்க்க முடியாத நுண்ணுயிரியான இஃது, தான் உயிர் வாழ்வதற்கான உணவை பிற உயிர்களிடமிருந்தே கவர்ந்து கொள்கிறது.
பக்டீரியாக்கள் உயிர் வாழ் பிராணவாயுவாகிய ஆக்சிஜனும் ஈரப்பதமும் 750 வரையுள்ள வெப்ப நிலையும் அவசியமாகும். இவை திருகு வடிவிலும், உருள் உருவிலும் குச்சி போன்ற தோற்றத்திலும் உள்ளன.
இவை மடியும் உயிரினங்களையும் தாவரங்களையும் மண்ணோடு மண்ணாக நன்கு மட்கச் செய்வதால் அஃது சிறந்த உரமாக உருவாகிறது. இதனால் தாவரங்கள் நன்கு செழித்து வளர ஏதுவாகிறது. உயிரின வளர்ச்சிக்கு இன்றியமையாத ஹைட்ரஜனை பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து ஈர்த்து மண்ணுக்குத் தருவதால் செடிகள் அதை மண்ணிலிருந்து பெற்று நன்கு வளர்கின்றன. பாலைப் புளிக்கச் செய்து பாலடைக்கட்டி, தயிர்,
மோர் தயாரிக்கவும் பாக்டீரியாக்களே துணை புரிகின்றன. பழச்சாற்றை நொதிக்கச் செய்வதும் பாக்டீரியாக்களே ஆகும்.
இனி, தீமை செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றிப் பார்ப்போம். இவ்வகை பாக்டீரியாக்களே டைபாய்டு, காலரா, டிப்தீரியா எனும் தொண்டையடைப்பான் நோய், நிமோனியாக் காய்ச்சல் இன்னும் பல தொற்று நோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, தக்காளி, புகையிலை போன்ற தாவரங்களுக்கு ஏற்படும் இலைச் சுருள் நோயை பாக்டீரியாக்களே உருவாக்குகின்றன. பாக்டீரியாக்களை அழிப்பது கடினமல்ல. சூரியக் கதிர் வெப்பத்தாலேயே பல பாக்டீரியாக்கள் இறந்துவிடுகின்றன. நீரை நன்கு கொதிக்க வைப்பதன் மூலமும் பாக்டீரியாக்களை எளிதாக அழித்துவிட முடியும். அதனால்தான் சூடுள்ள உணவை உட்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரைப் பருக வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 214)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wj5h26ka/
தமிழ்“பாக்டீரியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wj5h26ka/APA
Oliyon Research. (2026). பாக்டீரியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wj5h26ka/MLA
"பாக்டீரியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wj5h26ka/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment