சிவப்பிரகாச சுவாமிகள்

civappirakāca cuvāmikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவரைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பார் புதல்வர். வடமொழி தென்மொழி உணர்ந்த பெரும், புலவர். வீர சைவ மரபினர். இவர் வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர். கற்பனைக் களஞ்சியம் என்றும் சிறப்பித்துப் பேசப்படுபவர். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை பிரபுலிங்க லீலை, நால்வர் நான்மணி மாலை, சோணசைல மாலை, வெங்கைக் கலம்பகம்,வெங்கைக் கோவை, நிரோட்டக யமக அந்தாதி, சித்தாந்த சிகாமணி, வேதாந்த சூடாமணி, பெரியநாயகி கலித்துறை, தர்க்க பரிபாஷை, நன்னெறி, ஏசுமத நிராகரணம், திருக்கூவப் புராணம், திருக்காளத்தி புராணத்தில் இரண்டு சருக்கங்கள் முதலியன. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் படிக்காசு பெற்ற வரலாற்றை நான்மணி மாலையில் குறிப்பிடும்போது,"ஞான சம்பந்தர் பிராம்மணப் பிள்ளையாதலின் பிறர் கொடுக்க வாங்கத் தகும்; கொடுக்கும் குலமாகிய வேளாளர் குலத்தில் பிறந்த நீங்கள், வாங்கத் தகுமா?" என்று அப்பரை வினவும் வினா வேளாளர் மேம்பாட்டை உள்ளத்தில் வைத்து இவர் பாடியுள்ளது சிந்தித்தற்குரியது. காலம் 17ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 590)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wgpv5mxs/

தமிழ்
“சிவப்பிரகாச சுவாமிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wgpv5mxs/
APA
Oliyon Research. (2026). சிவப்பிரகாச சுவாமிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wgpv5mxs/
MLA
"சிவப்பிரகாச சுவாமிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wgpv5mxs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment