எல்லோராவில் உள்ள குகைகளின் மண்டபங்களிலும் சுவர்களிலும் கூரைகளிலும் தீட்டப்பட்டுள்ளன. கடவுளரின் திருவுருவங்கள், பூக்கள், விலங்குகள் போன்றவை இங்குள்ள ஓவியங்களாகும். அழகுமிக்க யானை, தாண்டவமாடும் நடராசர் போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன. கருடனின் மேல் அமர்ந்துள்ள இலக்குமி நாராயணன், பறக்கும் வித்தியாதரர்கள் போன்ற ஓவியங்கள் அழகு மிக்கவை. பறக்கும் வித்தியாதரர்கள் தங்கள் துணைவியருடன் காட்சி அளிக்கின்றனர். இவ்வோவியங்கள் இராட்டிரகூடர் கால ஓவியத் திறனைத் திறம்பட விளக்குகின்றன.