சாம்பல் நோய்
cāmpal nōy
இந்நோய் பல பயிர்களில் காணப்படுகிறது.
இந்நோய் பல பயிர்களில் காணப்படுகிறது. உளுந்து, பாசிப்பயறு, துவரை, கொத்தவரை, கொள்ளு அல்லது கானப்பயறு, தட்டைப்பயறு, பட்டாணி, மிளகாய், வெண்டை, எள், மா, பருத்தி, புகையிலை, வெந்தயம், சதகுப்பை (sowa), அவரை, சீரகம், கொத்துமல்லி போன்ற பயிர்களில் பொதுவாகச் சாம்பல் நோய் (powdery mildew disease) காணப்படும்.
அறிகுறிகள். இந்நோயினால் இலைகளிலும், தண்டின் முனையிலும் பூசணப் படிவுகள் வெண்மையாகக் காணப்படும். தாக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றிச் சிறுத்து விடுகின்றன. நோய் முனைப்புடன் தோன்றினால், இலைகள், பூக்கள் யாவும் உதிர்ந்து விடுகின்றன.
காரணி. இந்நோய் பெரும்பாலான பயிர்களில் எரிசிபே பாலிகோனி, லெவல்லுலா டார்கா என்ற பூசணங்களால் தோன்றுகிறது. இவ்விரண்டு பூசணங்களுமே வெந்தயப் பயிரில் சாம்பல் நோயை உண்டாக்குகின்றன.
அ. எரிசிபே பாலிகோனி. இப்பூசணம் பூசண இழைகளை (mucelia) வெளிப்புறத்தில் உண்டாக்கி, அவற்றிலிருந்து உறிஞ்சிகளை (haustoria) வெளிப்புறத் தோலின் திசுவறைக்குள் செலுத்துகிறது. பூசண இழை, குறுக்குச் சுவருடன் 4.6—5.0 மைக்கிரான் குறுக்களவைக் கொண்டது. தூள் வித்துத் தண்டு (conidiophore) 106.5—166.5 மைக்கிரான் நீளமுடையது. தண்டின் நுனிப் பகுதியுடன் சங்கிலித் தொடர் போன்று தூள் வித்துகள் (conidia) வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தூள் வித்துகள் ஒற்றைச் செல்லுடன், நிறமற்றும் கண் வடிவத்துடனும் 29-45X13-16 மைக்கிரான் அளவிலும் காணப்படும்.
ஆ. லெவல்லுலா டாரிகா. இப்பூசணம் திசுவறைகளுக்கிடையில் பரலிக் காணப்படும். உறிஞ்சிகள் திசுவறைகளின் உட்பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. உட்பகுதியிலுள்ள பூசண இழைகளிலிருந்து தூள் வித்துத் தண்டுகள் தோன்றி இலைத் துளை (stomata) வழியாகத் தனியாகவோ, கொத்தாகவோ வெளிப்படுகின்றன. ஒவ்வொரு தூள் வித்துத் தண்டிலிருந்தும், ஒவ்வொரு தூவி தோன்றும். தூள் வித்து கள் ஒற்றைத் திசுவறையுடன் திறமற்று உருளை வடிவத்தில் 35-80X12-28 மைக்கிரான் அளவுடன் காணப்படுகின்றன. வித்துக் குடுவை (cleistothecium) 200 மைக்கிரான் குறுக்களவில், உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 10—40 குடுவை உள் வித்துக் கூடுகள் (asci) உள்ளன இவை 80-100×30-40 மைக்கிரான் அளவுடையவை. ஒவ்வொரு குடுவைஉள் வித்துக் கூட்டிலும் ஒற்றைத் திசுவறையுடன் கூடிய முட்டை அல்லது சிறிது வளைந்த வடிவத்தில், நிறமற்ற இரண்டு ஆஸ்கோ வித்துகள் அடங்கியிருக்கும்.இவை 25-40×15-30 மைக்கிரான் அளவுடையவை. பரவுதல். காற்றின் மூலம் தூள் வித்துகள் பரவி, நோயைத் தோற்றுவிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த நுண்ணிய கந்தகத் தூளை ஹெக்டேருக்கு 25 கி.கி. வீதம் பயிரில் தூவ வேண்டும். —கா. சிவப்பிரகாசம் நூலோதி. R.S. Singh, Plant diseases, Oxford and IBH Publishing Co., Calcutta, 1968.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 58)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9zvxpnx/
தமிழ்“சாம்பல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9zvxpnx/APA
Oliyon Research. (2026). சாம்பல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9zvxpnx/MLA
"சாம்பல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9zvxpnx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment