சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அந்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.அர.சி.