அல்சிபியாடீசு
alcipiyāṭīcu
அமெரிக்க அரசியல் வித்தகர், இவர் 1945–ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அமெரிக்க அரசியல் வித்தகர், இவர் 1945–ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1933 முதல் 1944 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெளியுறவுச் செயலராகப் பணிபுரிந்தார். அல் கார்டெல் (Al–Cartel) முயற்சியால், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் தென் அமெரிக்க நாடுகளிடையேயும் அண்டைநாடுகளிடையேயும் நல்லுறவுக் கொள்கை தீவிரமாகச் செயற்பட்டது. அனைத்து அமெரிக்க நாடுகளுக்குமிடையே முழு ஒற்றுமையையும் இணக்கத்தையும் ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
பசிபிக்குக் கடற் பகுதியில் போர் மூள்வதை இவர் தடுக்க முயற்சிசெய்தார். சப்பான் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கியபோது, அதற்கு உடந்தையாய் இருந்தவர்களை இவர் சாடினார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்னும் கொள்கையை வெளியிட்டார். உடல் நலக் குறைவின் காரணமாகத் தம் பதவியை விட்டு, 1944–இல் விலகினார்.
அல் தென்னசியைச் சார்ந்த ஓவர்ட்டன் கவுன்டியில் பிறந்து கம்பர்லாந்து சட்டப்பள்ளியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் 1907–இல் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிச்சபையின் உறுப்பினரானார். 1913–இல் இவர் வருமான வரிச் சட்டத்தை எழுதி முடித்தார். 1916–இல் வாரிசுரிமை வரிச் சட்டத்தையும் எழுதி முடித்தார். உட்ரோ வில்சனை (Woodrow Wilson) ஆதரித்த இவர், பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவு ஏற்படக் குறைந்த வரிகளே அடிப்படையாக அமைய வேண்டுமென்பதைக் கருத்தாகக் கொண்டவர்.
1920–இல் மக்களாட்சித் தேசியக் குழுவின் தலைவராகவும், 1930-இல் மேலவையின் செனட்டு உறுப்பினராகவும் இருந்த கார்டெல் 1932–இல் நடைபெற்ற மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில், பிராங்கிளீன் உரூசுவெல்ட்டு என்பார் குடியரசுத் தலைவராக நியமனம் பெற உதவினார்.
அதேபோல் அல்சிபியாடீசின் அழகும், அறிவும் சாக்ரட்டீசைக் கவர்ந்தன.
இவர் கி.மு. 419–ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து மக்களின் மனத்தைக் கவர்ந்தார். போர் செய்த கட்சியின் தலைவராக இருந்தமையால் அல்சிபியாடீசு ஆதீனியர்கள் திறம்படைத்தவர்களாக ஆவது எங்ஙனம் என்பதைக் கூறினார். சிசிலியின் மீது படையெடுக்க வேண்டிப் படையொன்றைத் திரட்டிப் போருக்குச் செல்லுமாறு இவர் அனுமதிக்கப்பெற்றார். இப்படைகள் ஆதன்சு நகரை விட்டுச் செல்லப் புறப்பட ஆயத்தமாயிருந்தஞான்று, எர்மசு (Hermus) என்ற புனிதத் தெய்வச் சிலையை அழித்து விட்டார் என்று அவர்மீது மக்கள் குற்றஞ்சாட்டினர். விசாரணை வேண்டி வாதிட்ட அல்சிபியாடீசைப் போருக்குப் புறப்படும்படி கட்டளையிட்டனர். பின்னர் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டார். ஆனால் இவர் இசுபார்ட்டா நகருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அங்குச் சிசிலிய மக்களுக்கு உதவிடுமாறு இவர் இசுபார்ட்டா மக்களுக்கு அறிவுரை கூறினார். பின்னர் இவர் ஆசியா மைனருக்குச் சென்று, பாரசீகத் தலைவர் திசாபர்னசு என்பாருடன் இணைந்து கொண்டார்.
சிறிது காலத்திற்குப் பின்னர் அல்சிபியாடீசை ஆதீனியர்கள் மன்னித்துவிட்டனர். மீண்டும் படையை நடத்திச் செல்லுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். நாடுதிரும்பும் வழியில், ஆதீனியக் கப்பற்படையைக் கெலசுபாண்டில் (Helles pont) தலைமையேற்று நடத்தினார். இசுபார்ட்டா மக்களை எதிர்த்துப் போரிட்டுப் பல வெற்றிகளைப் பெற்றார். நகர மக்கள் இவருக்கு வீர வரவேற்பு நல்கினர். பின்னர் இவருடைய படைகள் நோசியம் என்னுமிடத்தில் தோற்றுப் போயின. அதன் விளைவாக மீண்டும் இவரை மக்கள் வெறுத்தனர். கி.மு. 405–ஆம் ஆண்டில் ஆதீனியர்கள் யகாசுபோடமி என்னுமிடத்தில் படுதோல்வி அடைந்தனர். மீண்டும் அல்சிபியாடீசு ஆசியாமைனரில் தஞ்சம் புகுந்தார். கி.மு. 404–இல் இவர் தங்கியிருந்த வீட்டிற்குப் பகைவர்கள் தீ வைத்தனர். தப்ப வழியின்றி அல்சிபியாடீசு இறந்து போனார்.
அல்சியர்சு
அல்சீரியாவின் தலைநகரும், மத்திய தரைக்கடலில் ஒரு துறைமுகமுமாகும். அல்சீரியாவின் மிகப் பெரும் நகரம் அல்சீயர்சுதான். இந்நகர் கி.பி. 900–ஆம் ஆண்டளவில் நிலைநாட்டப்பெற்றது. மூர் இனத்தவர்கள் பேரரசை நிலைநாட்டி இருந்த காலத்தில் இந்நகரமே அவர்களின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். அல்சீரசு வளைகுடாவை எதிர்நோக்கி மலைப்பாங்கான இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இன்றைய மாநகரம் மலைப்பிரிவின் தாழ்நிலப் பகுதியைப் பெரும்பாலும் கொண்டுள்ளது. மூர்கள் வாழ்ந்த பழம் பகுதியினைக் கசுபா (Kasba) என்பர். கசுபா என்பதற்குக் கோட்டை என்பது பொருள்; மலையுச்சியில் கட்டப்படுவது. மக்கள் குடியிருப்புகள் குறுகிய சந்துகளுக்கிடையே பெருகியுள்ளன. அல்சீயர்சு (Algiers) மாநகரின் மக்கள்தொகை 21,59,57 (1980).
அல்சியர்சு நகரம்
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 839)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w89m78hd/
தமிழ்“அல்சிபியாடீசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w89m78hd/APA
Oliyon Research. (2026). அல்சிபியாடீசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w89m78hd/MLA
"அல்சிபியாடீசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w89m78hd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment