அகர்தலா
akartalā
இந்திய மாநிலங்களுன் ஒன்றான திரிபுராவின் தலைநகர்.
இந்திய மாநிலங்களுன் ஒன்றான திரிபுராவின் தலைநகர். இந்நகரம் பங்களாதேசத்தை ஒட்டியுள்ளது. 23½° பாகை வடகுறுக்குக் கோடு இதன் அண்மையில் செல்கிறது. இந்நகர் அரிசி, பருத்தி, தேயிலை, சணல், கடுகு, எண்ணெய் போன்ற உற்பத்திப் பொருள்களின் வாணிக மையமாகும். இங்கு ஒரு விமானத் தளம் உண்டு. இங்கிருந்து கல்கத்தாவுக்கு வானவூர்திப் போக்குவரத்து ஒழுங்காக நடைபெறுகிறது. அகர்தலாவில் (Agartala) வங்காளமொழி நாளிதழ்கள் பல வெளியிடப்படுகின்றன. கைவினைப் பொருள்களைத் திட்டமிடும் மையமொன்று அகர்தலாவில் செயல்படுகிறது. இங்கு மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றும் இயங்குகிறது, அகர்தலாவையும் தர்மநகரையும் இணைக்கும் மின்சாரத் தொடர்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 104)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7eyh6p6/
தமிழ்“அகர்தலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w7eyh6p6/APA
Oliyon Research. (2026). அகர்தலா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7eyh6p6/MLA
"அகர்தலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w7eyh6p6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment