ரிஸ்க்
risk
பொருள்கள் · Senses
1.
சுருக்க நிரல் தொகுதி கணிப்பணி என்று பொருள்படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான எளிய நிரல்களின் அடிப்படையில் அதிவேகமாய் திறன்மிக்கதாய் செயல்படக்கூடிய ஒரு நுண் செயலி வடிவமைப்பு. ஒவ்வோர் நிரலையையும் ஒரு கடிகாரச் சுழற்சியிலேயே அதிவேகமாய் செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது ரிஸ்க் கட்டுமானம். மிக எளிய நிரல்களைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் நுண் செயலிகளைக் காட்டிலும் சிஸ்க் (CISC-Complex instruction Set Computing) நுண்செயலிகள் மிகவேகமாய் நிறைவேற்றுகின்றன. ஆனால், மிகவும் சிக்கலான நிரல்களைப் பொறுத்த மட்டில் ரிஸ்க் செயலிகளைவிட வேகத்தில் குறைந்தவையே காரணம், சிஸ்க் செயலிகள் சிக்கலான செயல்பாட்டிற்கும் தனித்தனி நிரல்களைக் கொண்டுள்ளன. ரிஸ்க் செயலிகள் பல நிரல்களின் தொகுப்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சன் மைக்ரோ சிஸ்டமஸ் நிறுவனத்தில் ஸ்பார்க் செயலி, மோட்டோரோலாவின் 88, 000 இன்டெல்லின் ஐ 860, ஆப்பிள், ஐபிஎம் மோட்டோரோலா ஆகியவற்றின் பவர்பீசி, ரிஸ்க் வகையைச் சேர்ந்தவை.
— RISC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvv35vwj/
தமிழ்“ரிஸ்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvv35vwj/APA
Oliyon Research. (2026). ரிஸ்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvv35vwj/MLA
"ரிஸ்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvv35vwj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment