சூல் கலைத்தல்
cūl kalaittal
கருவுற்று ஏழு மாதங்களுக்கு முன், சூல் பையிலிருந்து கரு வெளியேறி விட்டால், அது கருச் சிதைவு ஆகும்.
கருவுற்று ஏழு மாதங்களுக்கு முன், சூல் பையிலிருந்து கரு வெளியேறி விட்டால், அது கருச் சிதைவு ஆகும். தானாக ஏற்படும் கருச் சிதைவு, பதினைந்து சூல்களுக்கு ஒன்றாக நடை பெறுகிறது. இது மக்கள் தொகையைக் குறைக்கும் இயற்கை வழியாகும். ஆனால், ஊக்குவிப்பால் ஏற்படும் கருச் சிதைவு சட்டத்திற்கு உட்பட்டும், புறம்பாகவும் நடைபெறுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக நடை பெறுபவை அதிக ஊறு விளைவிக்கக் கூடியவை.
கருச்சிதைவால் ஏற்படும் ஊறுகள். தானாகவோ, ஊக்குவிப்பாலோ நடைபெறும் கருச் சிதைவுகளைத் தேர்ந்த மருத்துவர்களிடம் செய்து கொண்டாலும், ஊறுகள் விளைகின்றன. தாயின் உடல் நலக் கேடும், சில வேளை மரணம் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையும் தோன்றும். கருச் சிதைவால் மிகைக் குருதிப் போக்கு, கருப்பையில் துளை, புண், மிகு குருதிச் சோகை, எதிர்காலத்தில் கருவுறாத் தன்மை ஆகியன ஏற்படலாம். எட்டு வாரங்களுககுள் ஏற்படும் கருச் சிதைவுகளால் ஊறுகள் மிகக் குறைவு; மரணம் ஏற்படக் கூடிய தீங்கு 5–6 மாதங்களில் ஏற்படும் கருச் சிதைவுகளில் ஏழு மடங்கு மிகுதியாகக் காணப் படுகிறது. இந்தியச் சட்டம் இருபது வாரங்களுக்கு உட்பட்ட கருச் சிதைவையே அனுமதிக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான கருச் சிதைவுகள், தாயிடம் நலக் கேடும் மரணமும் ஏற்படுத்தும்.
கருக்கலைப்பிற்கான காரணங்கள். கருவைத் தொடர்வதால், தாயின் உடலுக்கு ஊறு விளைதல், தாயின் உடல், மனத்திற்குப் பெரும் கேடு நேர்தல், பிறக்கும் குழந்தை வாழ்வதற்கு இயலாத உடல் அமைப்பு, அல்லது மனத்தில் ஊனமுடன் இருத்தல், சுற்பழிப்பால் ஏற்படும் சூல், கருத்தடை முறை களைப் பயன்படுத்தியும் ஏற்படும் சூல் தோன்றல் முதலியன கருக் கலைப்பிற்கான காரணங்கள் ஆகும்.
கருச் சிதைவுகளைச் செய்யக் கூடியவர்கள். பதிவு பெற்ற, மகப் பேற்றுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களே 12 வாரங்களுக்குட்பட்ட சூலைக் கலைக்க வல்லவர். 12–20 வாரங்களில் கருச் சிதைவு ஏற்படின், இரு மருத்துவரின் ஒப்புதல் தேவை. கருச் சிதைவு செய்ய அரசு மருத்துவ மனைகளும், அரசு உரிமம் பெற்ற இடங்களுமே ஏற்றவை. சூல் கலைக்கும் முறைகள்
செலுத்துதல்; கருவின் புறத்தே மருந்து செலுத்துதல்
5. லாமினேரியா கூடும், ஆக்சிட்டோசினால் ஊக்குவிப்பும்.
கருச்சிதைவு ரகசியமாகவே செய்யப்படும். செய்ய வருபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப் படும்.
6. யோனியின் உள்ளே புரோஸ்டோகிளாண்டின் மருந்து செலுத்தல்.
7. உள்ளிருப்பதை உறிஞ்சி எடுத்தல்.
8. சூல் பையில் துளையிட்டுக் கருவை வெளிக் கொணருதல்.
மாத விலக்கு வாராமல், பதினான்கு நாளுக்குள் நெகிழிப் பீச்சுக் குழல் நீர்க் குழல் (cannula) மூலமாகச் சூல் பையின் உள்ளிருப்பை உறிஞ்சி எடுத்தலே மாத விலக்கு ஒழுங்குபடுத்துதல் (menstrual regulation) ஆகும். இது ஒரு கருத்தடை முறையாகாது. ஆனால், கருத்தடை முறைகள் செயலிழக்கும் சமயம், இது மிகவும் உதவி செய்யும். இது புற நோயாளர்ப் பகுதியிலேயே எவ்விதமான மயக்க நிலையும் தேவை இல்லாமல், செய்யக் கூடியதாகும். கருப்பையின் கழுத்துப் பகுதியில், 5–6 மி.மீ நெகிழி நீள் குழலைச் சூல் பையுள் செலுத்த வேண்டும். பின்னர் உறிஞ்சுவதற்காக 50 க.செ.மீ. நெகிழிப் பீச்சுக் குழாயை இதனுடன் தொடர்பு படுத்த வேண்டும். இதனால், வெற்றிடம் உருவாகும். இது மிகவும் சாதாரணமான, முற்றிலும் பாதுகாப்பான முறையாகும். எனினும், சூல் தொடர்வதற்கான குறிகள் இரண்டொரு நபர்களில் காணப்படுவதால், இம்முறை முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்வது நல்லது.
கருப்பையின் உள்ளடக்கத்தை உறிஞ்சி, வெளியேற்றும் முறை முதல் மூன்று மாதங்களில் செய்யக் கூடிய சிறந்த முறையாகும். இம்முறையே தடுக்க முடியாத கருச் சிதைவுகளிலும், குறை கருச்சிதைவுகளிலும், முழுச் சூலிலும் பயன்படுகிறது.
இது புற நோயாளர்ப் பகுதியிலேயே செய்யக் கூடியது. கருப்பையின் கழுத்தில், பக்க வாட்டில் வலியுறாத் தன்மை ஏற்படுத்தி, கழுத்தின் வாயிலைப் பெரிது படுத்தி, உலோகத்தால் செய்யப்பட்ட நீண்ட குழலை உட்செலுத்தலாம். உலோகக் குழல்கள் 4 அளவுகளில் (6, 8, 10, 12 மி.மீ) கிடைக்கும். இவற்றைச் சூலின் கால அளவிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். வெற்றிடத்தை ஏற்படுத்தி, நீண்ட குழலின் மூலம் கருப் பொருள் வெளியேற்றப் பட, அதிக வெற்றிடம் தேவைப்படுகிறது. உறிஞ்சும் குழலின் மேல் உறுதியாகச் சுருங்குவதே, கருப் பொருள் முழுமையாக வெளியேறி விட்டதற்கான அறிகுறியாகும். அப்போது, வெற்றிடத்தை நீக்கிக் குழலை வெளியே எடுக்க வேண்டும். உறிஞ்சி அகற்றுதலின் பயன்கள் குறைந்த அளவு குருதிப் போக்கு, குறைந்த அளவு புண் ஏற்படுதல், சூல் பையின் கழுத்துக்குக் குறைந்த அளவு ஊறு விளைவித்தல், சூல் பையில் துளையிடுவதற்கான ஆபத்துக் குறைதல், சூல் பையினுள் இணைப்பு ஏற்பட்டு, மாத விடாய் நிற்றலைத் தவிர்த்தல், மிக விரைவில் செயல்படல் என்பவை.
சூல்பையின் கழுத்தைத் தளர்த்திக் கருப் பொருளைச் சுரண்டி எடுக்கும் இம்முறை, தற்போது கை விடப்பட்டு, உறிஞ்சி அகற்றும் முறையே பின் பற்றப் படுகிறது.
முதல் மூன்று மாதங்களில் சூல் கலைத்தலால் ஏற்படும் ஊறுகள். உறிஞ்சி அகற்றும் முறையைப் பின் பற்றாவிடில், மிகைக் குருதிப் போக்கு ஏற்படுகிறது. சில சமயம் கருப் பொருள் உள் தங்கி, அதிக அளவு குருதிச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், வெற்றிடத்தின் மூலம் உறிஞ்சி அகற்றிய பின், ஆய்வாகச் சுரண்டல் வேண்டும். பிண்டப் பை (foetal sac) சுரண்டல் மூலம் வெளியேறா விட்டால், சூல் தொடரும். இதனால், இம்முறைகளில் 1–2 வாரங்களுக்குப் பிறகும், ஆய்வு செய்து கொள்வது நல்லது. நல வாழ்வு முறைகளைப் பின்பற்றா விட்டால், சூல் பையின் அடுத்த சூழல்களில் அடைப்பு ஏற்படக் கூடும். கருப்பையின் கழுத்து வாயிலை மிகுந்த வீரியத்துடன் தளர்த்தினால், தகுதியற்ற கழுத்து உருவாகும். சுரண்டலால், சூல் பையின் இரு பக்கங்களும் ஒன்றுடன் ஒன்று இணைய மாத விடாய் நின்று விடுவதும் உண்டு. Rh- தாயிடம் Rh+ உடைய கரு உருவாயிருக்குமேயாயின், Rh எதிர்ப்பாற்றல் தாயிடம் உருவாகிறது. <!---- Content verified in internet ----> இதற்காகத் தாய்க்கு 100 மைக்ரோ கிராம் எதிர் D உடலில் செலுத்த வேண்டும்.
கருவின் புறத்தே மருந்து செலுத்துதல். இம்முறை 12–14 வாரங்களான கருவிற்கே ஏற்றது. கரு மிகப் பெரியதாக இருப்பதால், உறிஞ்சி அகற்றும் முறை பயன்படுவதில்லை. அதே வேளை பனிக் குடப் பை சரி வர உருவாகாமல் சிறியதாக இருப்பதால், பனிக்குடத்தினுள் ஊசி செலுத்துவது கடினமாகிறது. இம்முறையை 15 வாரங்களுக்குப் பிற்பட்ட சூலுக்கும் பயன்படுத்தலாம். சூல் பையின் கழுத்தின் வழியே ஃபோலீகத்தீட்டர் (Foleycatheter) மூலம் புரோஸ்டோகிளாண்டின் அல்லது 150 மி.லி. எதாக்ரிடீன் லேக்டேட் மருந்தைக் கருவின் புறத்தே செலுத்தி, சில மணி இருக்கச் செய்தல் வேண்டும். இம்முறை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் கரு வெளியேறி விடும். கருவின் புறத்தே மருந்து செலுத்திச் சூல் கலைக்கும் முறை பனிக் குடத்தினுள் மருந்து செலுத்தும் முறையை விடப் பாதுகாப்பானது.
பனிப் பையின் உள்ளே மருந்து செலுத்திக் கருக் கலைத்தல். இம்முறை 15–20 வாரங்களான கருவைக் கலைக்க உதவுகிறது. உதரத்தின் வழியே பக்க வாட்டில் வலியின்மை ஏற்படுத்தி, எண் 18 நீள் ஊசி பனிப் பையினுள் செலுத்தப் படும். தற்போது பயன்பாட்டில் இருப்பவை 20% உப்பு நீர் (saline) 150–250 மி.லி. இம்முறை தற்போது மிகவும் பயன் படுகிறது. உடலில் அதிக சோடியமும், குருதி உறைவதில் சில கோளாறுகளும் ஏற்படக் கூடும்.
பனிக் குடத்தினுள் மருந்து செலுத்திய பின், 80–98% பெண்களுக்கு 48–72 மணி நேரத்திற்குள், சூல் கலைந்து விடும். இதில் 20% குறை கருச் சிதைவாக அமையும். குருதி உறைவதில் கோளாறுகள் ஏற்படுவதன் மூலம், அதிக குருதிச் சேதம் ஏற்படுகிறது.
லேமினேரியா கூட்டினால், கருவகக் கழுத்தைத் தளரச் செய்து, நாளத்தின் மூலம் ஆக்சிட்டோசின் மருந்தைச் செலுத்திச் சூல் கலைக்கலாம். கருப்பையின் கழுத்து கிழிந்து விட வாய்ப்புள்ளமையால், ஆய்வு செய்து பார்த்தல் வேண்டும். இவ்வாறாக, ஏற்படும் கருச் சிதைவுகளால், பின்னால் ஏற்படும் சூல்களிலும் தானாகவே கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.மேற்காணும் முறைகள் பயனளிக்கா விட்டால், சூல் பையைக் கிழித்துப் பிண்டத்தை வெளியேற்றலாம். இம்முறையுடன், சினை நாளம் அகற்றலும் (tubectomy) செய்யலாம்.
கருச் சிதைவிற்கு வரும் தாய்மாரின் நோக்கத்தை முதலில் நன்கறிய வேண்டும். இன்றியமையா நிலையிலேயே, மருத்துவர் கருச் சிதைவு செய்ய முன் வர வேண்டும். இதற்கு முன்னர், தாயின் உடல், மன நிலையை நன்கு ஆய்ந்து, சூல் பையின் பரிமாணம், நிலைகளை அறிய வேண்டும். சிறு நீரக ஆய்வு, குருதி வகை, Rh வகை, மேக நோய் முதலியவற்றுக்கான ஆய்வும் செய்தல் வேண்டும்.கருச் சிதைவுச் சட்டத்தை எளிதாக்கியமையால், தாயின் உடல் நலக் கேடும், மரணம் விளைதலும் மிகவும் குறைந்துள்ளன. ஆனால், தொடர்ந்து கருச் சிதைவு செய்வது, தாயின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாம். கருச் சிதைவு பிற கருத்தடை முறைகளுக்கு மாற்றாகாது, —ஜோதி விஜயராணி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 648)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsezq7dw/
தமிழ்“சூல் கலைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vsezq7dw/APA
Oliyon Research. (2026). சூல் கலைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsezq7dw/MLA
"சூல் கலைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vsezq7dw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment