உபநயனம்
upanayaṉam
உபநயனம் என்பது ஒரு மாணவன் கல்வி பயிலுங்கால் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்துவதாகும்.
உபநயனம் என்பது ஒரு மாணவன் கல்வி பயிலுங்கால் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்துவதாகும். ஒரு மனிதனது வாழ்க்கையின் தொடக்கம் மாணவப் பருவம். மாணவன், இந்தப்பருவத்தில் உடலையும் உள்ளத்தையும் செம்மைப்படுத்தித் தூய்மையான வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாதது. ஆகவே, இந்த மாணவப் பருவம் பிரமசரியம் என்று கூறப்படுகிறது. பிரமசரியம் என்ற சொல்லுக்குத் ‘தன்னடக்கமுள்ள வாழ்க்கை முறை’ என்பது பொருள். இந்தப் பிரமசரியப் பருவத்தின் அடிப்படையில் மற்ற மூன்று வாழ்க்கை முறைகளும் அமைவதால், இந்தப் பருவமே அம்மூன்றின் அடித்தளமாக அமைகிறது.
ஒரு சிறுவன் தன்னைத்தானே போற்றிப் பாதுகாத்துக் கொள்ளும் பருவம் எய்தியவுடன், தக்க ஆசிரியருடன் வசித்துக் கல்வி பயில அனுப்பி வைக்கப்படவேண்டியவன் ஆகிறான். மாணவன் ஆசிரியரை அணுகுங்கால், அவர் மாணவனுக்கு முப்புரி நூலை அணிவித்துக் ‘கோல்’ வழங்கி, மான்தோல் கொடுத்து, கோவணமும் மஞ்சள் துணியும் உடுத்தச் செய்து, முஞ்சாப் புல்லை மூன்று தடவை இடுப்பைச் சுற்றி அணிவித்து, மந்திரங்களிலேயே தலை சிறந்ததான காயத்திரி மந்திரத்தை அவனுக்கு அருளிச் செய்து ஏற்றுக் கொள்கிறார். இங்ஙனம், ஆசிரியர் மாணவனுக்கு முப்புரிநூல் அணிவித்துக் காயத்திரியைப் போதித்த கணத்திலிருந்து, மாணவன் ‘இரண்டாம் பிறப்பு’ எடுத்தவனாகக் கருதப்படுகிறான்.
யாக்ஞவல்கியர் என்ற மாமுனிவர் ஆசிரியர் மாணவனுக்கு முப்புரிநூல் அணிவித்துக் காயத்திரியைப் போதிக்க வேண்டிய வயதைப் பிராமணர்களுக்கு 8 என்றும் என்றும் சத்திரியர்களுக்கு 11 வைசியர்களுக்கு 12 என்றும் கூறுகிறார். ஆனால் மனு மேற்கண்டவர்களுக்குக் காயத்திரி போதிக்க வேண்டிய வயதை 5,6,8 என வேறாக முறைப்படுத்திக் கூறுகிறார்.
மாணவன் ஆசிரியரின் அருகிலிருந்து கல்வி பயிலுங்கால், எத்தகைய ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை ஆசிரியர் முப்புரி, நூலையும் பிற சாதனங்களையும் வழங்கும்போது குறிப்பாக உணர்த்துகிறார்.
முப்புரிநூல்
முப்புரிநூலில் மூன்று இழைகளும் அவை சேர்ந்த ஒரு முடிச்சும் உள்ளன. மூன்று இழைகளும் மேற்கூறிய மூன்றின் தத்துவ மறைபொருளை உணர்த்துகின்றன. எனவே, முப்புரிநூலை அணிவது, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் மாணவன் கட்டுப்பாடு உடையவனாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கோல்
இது மாணவன் தன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று வெளிப்பாடுகளிலும் விழிப்புடையவனாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
மான்தோல்
இது மாணவன் கல்வி பயிலுங்கால் துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.
கோவணமும் மஞ்சள் துணியும் உடுத்துதல்
ஒருவனது வாழ்க்கையில் மாணவப்பருவம் ‘இரண்டாம் பிறவி’, அதாவது ‘ஆன்மிகப் பிறவி’. மஞ்சள் தெய்விகத்தைக் குறிப்பதால், மஞ்சள் துணி அணிதல், மாணவன் ஆன்ம தேகம் அடையப் பெற்றதைக் குறிக்கிறது. கோவணம் உடுத்துதல் மாணவன் ஆசைகளை அடக்கித் தூய்மையான வாழ்க்கையைக் கடைப்பிடித்து, தனது தலையாய கல்வி கற்றலில் முழுக் கவனத்தைச் செலுத்தவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
முஞ்சாப்புல் அணிவித்தல்
முஞ்சாப்புல்லை மூன்று தடவை மாணவன் இடுப்பைச் சுற்றி அணிவித்தல் அவன் இப்பருவத்தில் வேதங்களின் கிளைகளான சம்கிதைகள், பிராமணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்க வேண்டியதன் இன்றியமையாமையைக் குறிக்கிறது.
காயத்திரி மந்திரம்
இந்த மந்திரம் ஆதவனை மையமாகக் கொண்டது. இதன் பொருள், தன்மை, அமைப்பு ஆகியவை இதனைத் தலைசிறந்த மந்திரமாக உயர்த்தியிருக்கிறது.
இங்ஙனம், மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்லுதலையே ‘உபநயனம்’ என்ற சொல் குறிக்கிறது. ‘உப’ = அருகே; ‘நயனம்’ = நடத்திச் செல்லுதல். ஆனால், காலப்போக்கில் முப்புரிநூல் அணிவித்தல் என்பது ஒரு சடங்காக உருவெடுத்து, அதுவே ‘உபநயனம்’ என்று சொல்லப்படுகிறது. ஒரு மாணவனுக்கு இந்து சமயத்தைப் பற்றி முதன்முதலாக அறிவிக்கும் செயலும் உபநயனம் (Initiatton) எனப்படுகிறது. எஸ்.ஓ.ரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 917)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrsqcfvd/
தமிழ்“உபநயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vrsqcfvd/APA
Oliyon Research. (2026). உபநயனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vrsqcfvd/MLA
"உபநயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vrsqcfvd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment