சுழலி செலுத்தி
cuḻali celutti
இதன் அமைப்பு ஒரு வளிமச் சுழலியின் திட்ட அமைப்பைப் பொறுத்திருக்கும்.
இதன் அமைப்பு ஒரு வளிமச் சுழலியின் திட்ட அமைப்பைப் பொறுத்திருக்கும். சுழலி நிலையாக இருந்து, சுழல் திறனை மட்டும் வெளிப்படுத்தும். ஆனால், சுழலி செலுத்தியில் (turbine propeller) ஒரு முற்செலுத்தி விசிறி பொருத்தப்பட்டிருக்கும். இதனால், பின் நோக்கிச் செலுத்தப்படும் விசையும், முற்செலுத்தியின் திசையும் காற்றினாடே மிக விரைவாக ஊடுருவிச் செல்லும் அமைப்பில் இருக்கும். இதன் எளிய அமைப்பின் அடிப்படை படத்தில் விளக்கப் பட்டுள்ளது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இந்த அமைப்பில் கனற்சி வளிமங்கள் பகுதியளவாக, 80% சுழலியிலும் எஞ்சிய அளவாக 20%பீற்றுக் குழலிலும் விரிவடையும். வெளிப்படும் ஆற்றலில் ஏறத் தாழ 80% வேகக் குறைப்புப் பல்லிணைகள் (reducing gear) மூலம் முற்செலுத்தியைச் சுழல வைக்கும். சில சமயம், சுழலியில் வெளி வந்த காற்று பீற்று வழிக்குச் செல்லும் முன் வெப்பப் படுத்தப்பட்டு விரிவடைவதால் வெளிப்படு அமுக்கம் (output thrust) உயரக் கூடும்.
சுழலி தாரையின் குறிப்பிடக் கூடிய நன்மைகளான எளிய திட்ட அமைப்பையும், குறைந்த எடையையும் இச்சுழலி செலுத்தி பெற்றிருக்கும். முற்செலுத்தியில் இருக்கக் கூடிய நன்மைகளான உயர் ஆற்றலும், மேலெழுதலும். மணிக்கு 600 கி.மீ. விரைவிற்குக் குறைந்தாலும், உந்து திறனைப் (propulsion efficiency) பெற்றிருக்கும். எரி பொருள் மிகக் குறைவாகவே தேவைப்படுவது முதன்மையாகும். இச்சுழலி செலுத்தியைத் தேவையான அமைப்பில் செங்குத்தாக மேலேழுப்பிக் கீழிறக்க வல்ல திருகு வானூர்தியிலும் (helicopter) பொருத்தலாம். —கே. ஆர். கோவிந்தன் நூலோதி. Harold. A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 571)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcby/
தமிழ்“சுழலி செலுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcby/APA
Oliyon Research. (2026). சுழலி செலுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcby/MLA
"சுழலி செலுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcby/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment