இந்நகரம் கோராட்டிர மாநிலத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்நகர் ஒரு மாவட்டத்தின் மையமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் தக்காணப்பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ளது; கரிசல்மண் கொண்ட பகுதியாகும். பருத்தி விளையும் பகுதியின் மையமாய் விளங்கும் இந்நகரில் பஞ்சாலைகள் மிகுதியாக உள்ளன. இம்மாவட்டத்தில் மழை குறைவு. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. நூற்பாலைகள் தொடர்பான பல கைத்தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. நைசாம் மரபினரான அகமது நிசாம்சா என்பவர் இந்நகரை உருவாக்கினார், அகமதுநகர் அரசர்களுக்கும் விசயநகரப் பேரரசர்களுக்கும் இங்குப் போர் மூண்டது. இராமராயர் என்னும் விசயநகர அரசர் அகமதுநகர் மன்னரைத் தோற்கடித்தார். மீண்டும் கி.பி. 1563-ஆம் ஆண்டில் விசயநகரப் படைகள் இந்நகரைக் கைப்பற்றிக் கொடுமைகள் பல புரிந்தன. கி.பி. 1565 ஆம் ஆண்டில் மூண்ட தலைக்கோட்டைப் போரின் போது அகமது நகர் இசுலாமிய அரசுகளுடன் இணைந்து கொண்டது. முகலாயருடைய ஆட்சிக் காலத்தில் அகமது நகரை அரசாட்சி செய்தவர் சாந்துபீபி என்னும் அரசியாவார். சாந்து பீபியைக் கி.பி. 1600-இல் அக்பர் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார். பின்னர், இது மொகலாயப் பேரரசின் தென் மாநிலங்கள் மூன்றில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்நகரை மராத்தியர் கி.பி. 1797-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் படைத்தலைவரான ஆர்தர் வெல்லெசுலி கி.பி. 1803-இல் இந்த நகரைக் கைப்பற்றினார். அகமது நகரில் உள்ள கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோட்டையில் வண்ண ஓவியங்களும் உள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சவகர்லால் நேரு இங்குள்ள கோட்டையில் மூன்றாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட காலத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத்து உட்பட இந்திய நாட்டுத் தலைவர்கள் பலர் அகமதுநகர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இங்குத்தான் பண்டித தேரு ‘இந்தியக் கண்டு- அகமதுநகர்க் கோட்டை பிடிப்பு’ (Discovery of India) என்னும் வரலாற்று நூலை எழுதித் தம்முடன் சிறையில் இருந்த இணைக் கைதிகளுக்குப் படைத்தார். இந்நகரின் மக்கள் தொகை 1,81,239.