சிம்புபடுத்திய நூல்
cimpupaṭuttiya nūl
சிம்பு நார் நூலின் தனிச்சிறப்பியல்புகளைக் கொண்ட நூலிழையிலிருந்து ஒரு வகைப் போலியான (mock) சிம்பு நார் நூல் தயாரிக்கப்படுகிறது.
சிம்பு நார் நூலின் தனிச்சிறப்பியல்புகளைக் கொண்ட நூலிழையிலிருந்து ஒரு வகைப் போலியான (mock) சிம்பு நார் நூல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகை இழையும் கீழ் நோக்கி முறுக்கு இயக்கத்திற்கு உட்படுத்தப்படும் போது, சுருணைச் சிப்பத்தைச் (winding package) சுற்றிப் பருமனாக இருக்குமாறு வைக்கப்படும். பிறகு, ஓர் உராய்வுப் பொருள் அல்லது வெட்டுங் கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு செய்யப்படும். வகையின் தொடர்ச்சி விடாதிருக்குமாறு சில இழைகள் மட்டுமே கடுமையாக இருக்கும். இங்கு தொடர்ந்த விளைபொருளான கண்ணாடியிழை (spun), சிம்பு நாரால் சேர்க்கப் பட்டது போலத் தோன்றும். முன் முறைப்படி நூல்கள், இழையின் உண்மையான பருமனை விடாமல் வைத்திருக்கும். ஆனால், பிளவு அல்லது முறிவுத் தன்மை (rupturing principle), முதிரா இழை வடிவிலுள்ள தொடர் இழைகளுக்கு இப்பொழுது ஏற்றதாக இருக்கும்.
சிம்பு நார் நூற்றலில் வழக்கமான இறுதி நிலைகளான இழுத்தல் (drawing), நூற்றல் ஆகியவை சிம்புபடுத்துதலுக்குப் பிறகு நிகழும். இழைகள் எப்பொழுதும் தம் இணை அமைப்பை இழக்கா. நூலின் இறுதி எண்ணிக்கை, செலுத்தப்பட்ட இழுவையின் அளவை வைத்துக் கணக்கிடப்படும். —இரா. இந்து நூலோதி. Z. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth Publishing Company, London, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 245)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqgb3ggn/
தமிழ்“சிம்புபடுத்திய நூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vqgb3ggn/APA
Oliyon Research. (2026). சிம்புபடுத்திய நூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqgb3ggn/MLA
"சிம்புபடுத்திய நூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vqgb3ggn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment