இறையனார்
iṟaiyaṉār
சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் சிவபெருமானைக் குறிக்கும் தெய்வப் பெயராகிய இறையனார் என்னும் பெயரைத் தம் இயற்பெயராகப் பெற்றவர். இவருடைய ஒரே பாடல் குறுந்தொகை இரண்டாம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித திணையிலமைந்த இப்பாடல் இயற்கைப் புணர்ச்சியிற் கூடிய தலைவன், தன் அன்பு நலம் தோன்றத் தலைவியின் நலம் பாராட்டுவதாக உள்ளது. தும்பியினை விளித்துக் கூறும் இப்பாடலில் அதனைக் ‘கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத்தும்பி’ என்று குறிப்பிட்டமை நயமிக்கதாக உள்ளது. திருவிளையாடற் புராணம் ‘இறையனார்’ என்பது மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் சிவபெருமானை–சோமசுந்தரம் பெருமானைக் குறிக்கும் பெயர் என்றும், அவர் தருமிக்குப் பொற்கிழி கிடைக்கச் செய்யும் பொருட்டு இப்பாடலைப் பாடித் தந்தார் என்றும் கூறுகிறது. இப்பாடலைத் தருமி பாண்டியன் அவையிற் கூறிப் பரிசு பெறும் பொழுது நக்கீரர் இதன்கண் குற்றம் உள்ளது என்று கூறிப் பரிசு வழங்காது தடுத்தார் என்றும், அதனால் தருமி முறையிடச் சிவபெருமானே புலவர் உருவில் வந்து நக்கீரரோடு வாதிட்டாரென்னும், இறுதியில் இறைவனால் சாபமும் பின்னர்ச் சாபநீக்கமும் பெற்றார் என்றும் அப்புராணம் கூறுகிறது. அப்புராண வரலாறு எவ்வாறாயினும், ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் ஓர் அகப்பாடலும் அதன் ஆசிரியரும் பற்றி, பக்தி இயக்கக் காலத்திலும் அதனை அடுத்துத் தோன்றிய புராண காலத்திலும் வாழ்ந்த சமயப் புலவர்கள் கொண்ட வளமான கற்பனையின் விளைவு இது எனக்கொண்டு பயன் கொள்வது ஏற்புடையதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 535)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vq7gyy9q/
தமிழ்“இறையனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vq7gyy9q/APA
Oliyon Research. (2026). இறையனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vq7gyy9q/MLA
"இறையனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vq7gyy9q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment