ஆன்டேரியோ ஏரி
āṉṭēriyō ēri
ஆன்டேரியோ ஏரி வடஅமெரிக்காவில் பெரிய ஏரிகள் என்று வழங்கும் ஐந்தனுள் மிகச் சிறியது; கீழ்க்கோடியிலுள்ளது.
ஆன்டேரியோ ஏரி வடஅமெரிக்காவில் பெரிய ஏரிகள் என்று வழங்கும் ஐந்தனுள் மிகச் சிறியது; கீழ்க்கோடியிலுள்ளது. பெரிய கப்பல்கள் ஆண்டு முழுவதும் ஏரியின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல முடியும். இது ஆன்டோரியோ மாகாணத்துக்கும் நியூயார்க் மாகாணத்தின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலுள்ளது. 185 மைல் நீளம்; 60 மைல் அகலம். பரப்பு 7,540 ச.மைல். கரை 480 மைல் நீளம்; ஆழம் 500-774 அடி. ஏரி கடல் மட்டத்திலிருந்து 248 அடி உயரத்திலுள்ளது. இதன் நீர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் வழியாக அட்லான்டிக் சமுத்திரத்தைச் சேர்கிறது. நயாகரா ஆறு இதையும் இரி ஏரியையும் இணைக்கிறது. நான்கு ஆறுகள் இதற்கு நீர் கொண்டுவந்து சேர்க்கின்றன. துறைமுகங்கள் இருக்கின்றன. இதன் கரையில் டரான்டோ, ஹாமில்ட்டன் போன்ற முக்கியமான பல நல்ல துறைமுகங்கள் உள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 525)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnvdqkt2/
தமிழ்“ஆன்டேரியோ ஏரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnvdqkt2/APA
Oliyon Research. (2026). ஆன்டேரியோ ஏரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vnvdqkt2/MLA
"ஆன்டேரியோ ஏரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnvdqkt2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment