<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இது புவிக்கு முதல் புறக் கோள், புவியை விடச் சிறிய கோள். இதன் நிறை, புவியின் நிறையில் 1/10 பங்கு ஆகும். செவ்வாய், வெள்ளிக் கோள்கள் போலல்லாமல், மெல்லிய வளி மண்டலமுடையது. இக்கோளில் உயிரினம் இருப்பதற்கான அறிகுறிகள், இதன் ஆய்விற்கான ஆர்வமாக அமையும். ஏனைய உட்கோளை விட அடர்த்தி குறைவானது; ஆனால், சந்திரனை விட அடர்த்தி மிகுந்தது. இதன் விட்டம் புதன் கோளின் விட்டத்தை விட 3800 கி.மீ. மிகுதி. என்றாலும், இதன் பரப்பின் ஈர்ப்பு, புதனின் பரப்பு ஈர்ப்புக்கு ஏறக் குறைய சமம். சூரியன்–செவ்வாய் தொலைவு 1.54 வானியல் அலகு, செவ்வாயின் நடு வரை விட்டம் 6794 கி.மீ. இதன் அச்சுச் சுழற்சிக் காலம் 24 மணி 37 நிமிடம் 23 நொடி. அதன் சுற்றுப் பாதையுடன் (இயங்கு வழியுடன்) கொண்ட சாய்வுக் கோணம் 24°46' (அட்டவணை 1). <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஏவூர்திகள், செயற்கைக் கோள்கள் அளித்த விவரங்கள் மூலம் செவ்வாயின் மையப் பகுதி சிறியது என்றும், ஏனைய கோளை விட அடர்த்தி குறைந்தது என்றும், அதில் இரும்பு–கந்தகப் பொருளே (FeS) மிகுதியாக உள்ளது என்றும் தெரிகிறது. இதன் மூலம், சோவியத் நாட்டின் செவ்வாய் ஆய்வுப் படியும், வைக்கிங் விண்வெளிக் கப்பல்களின் ஆய்வுப் படியும், செவ்வாய் வலிமை குன்றிய காந்தப் புலன் உடையது என அறியப் பட்டது. அதன் பின் தொடர்ந்த அமெரிக்காலின் மூன்று மெரினர் கப்பல்களின் ஆய்வு இது பற்றி குறிப்பிடத் தக்க விவரம் கொடுக்கவில்லை. எரிமலை வாய்கள். விண் கப்பல்கள் மெரினர் 4, 7 இரண்டும், செவ்வாயின் பரப்பு பள்ளமாகவும், படு குழியாகவும் இருப்பதைத் தெரிவித்தன. ஆனால், மெரினர் 9தான் சரியான பரப்பைப் பற்றியும், அதில் பரவியுள்ள எரிமலைவாய்களைப் பற்றியும், ஏனைய தகவல்களையும் விளக்கியது. 1971ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மெரினர்–9, நவம்பர் 11. 1971 அன்று செவ்வாய்க்கு 1200 கி.மீ. அருகில் சென்று 11 மாதங்கள் அதைச் சுற்றி வலம் வந்து கொண்டே, 7329 படங்களை அனுப்பி வைத்தது. அவை கோளின் பரப்பு, வளி மண்டலம், துணைக் கோள்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றைப் பற்றியும், கோள்களின் படிமலர்ச்சி பற்றிய வியத்தகு தகவல்களையும் அறியப் பயன் பட்டன. ஒலிம்பஸ் எரிமலை வாய் 640 கி.மீ. விட்டம் கொண்டு காணப் பட்டது. இமய மலையை விட, 21 மடங்கு உயரமுடைய விளிம்புகளையும் (26 கி.மீ.), 480–2240 கி.மீ. அகலத்தையும் கொண்டிருந்தது. பல கி.மீ. ஆழமுள்ள எரிமலை வாய்கள் காணப் பட்டன. 160–1600 கி.மீ. நீளமுள்ள வளைந்த வாய்க்கால்கள் நெடுநாள் நிலைத்தவையாகக் காணப் பட்டன. 1976ஆம் ஆண்டு செவ்வாயின் மீது இறக்கப்பட்ட வைக்கிங் விண்வெளிக் கப்பல் செவ்வாயின் பரப்பு மணல், உள் அடுக்கு (உள் கூடு) ஆகியவற்றைத் தோண்டி எடுத்து, அங்கு நுண்ணுயிரிகள் இருக்கக் கூடுமா என்று ஆய்வு செய்ததில், தெளிவான கருத்துக் கிடைக்கவில்லை. பரப்பில் குறுகிய பள்ளத்தாக்குகளும், ஆற்றுக் குடைவும், நெடுந்தொலைவு செல்லும் வாய்க்கால்களும் இருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எழுந்தது. சோலியத் செவ்வாய்–5 நுண்ணாய்வி தெளிவான படங்களுடன் திரும்பியது. பின்னர் சென்ற வைக்கிங் சுற்றிகள், புதிதாக மிக வியப்பான உண்மையை உணர்த்தின. இதன் பரப்பு தோராயமான இரு பாதிக் கோளங்களாகப் பிரிக்கப் பட்டு, இடைப் பட்ட வரம்பு சீரான 1–2 கி.மீ. உயரமுள்ள சரிவு மேட்டினால் (மேட்டுச் சரிவு) பிரிக்கப் பட்டு, அழகான மரச் சித்திர வேலைப்பாடு அமைந்த தரையெனக் காட்சி தரு- கிறது. உயர்ந்த நிலங்கள் அரிக்கப் பட்டுச் சிதறிக் காணப் படுகின்றன. தென் பாதிக் கோளம் உயர்ந்தும், கனத்தும், பழமையாகவும், எரிமலை வாய்கள் நிறைந்ததாகவும், காணப் படுகிறது. வட பாதிக் கோளம் தாழ்ந்த நிலப் பரப்புடன், குறிப்பிடத் தக்க ஏதுமில்லாத சமவெளியாகக் காட்சி தருகிறது. புதிய எரிமலை வாய்கள் எங்கும் பரவி, இந்நிலப் பகுதி காணப்படும். எரிமலைச் சிதறல்கள் நிறைந்த தோற்றம் தரும். இப்பகுதி எரிமலை வாய்கள் பெருமமாக 10 கி.மீ. விட்டம் கொண்டுள்ளன. ஆனால், தென் பகுதியில் பல வளையங்களையுடைய 4 கி.மீ. ஆழம், 2000 கி.மீ. குறுக்களவு உடைய ஹெல்லாஸ் (hellas) தென் படுகிறது. அதன் மத்திய உச்சிச் சிகரம், சிகர வளையம் ஆகியன புதன் கோளின் பரப்பில் உள்ளனவற்றுடன் ஒத்துள்ளன. எரிமலைத் தன்மை. வளைந்த மலைத் தொடர்களின் பரப்பில் எலிசியம், ஹெல்லாஸ் ஆகிய எரிமலைப் பகுதிகள் உள்ளன. இவற்றுள், தார்லிஸ் எரிமலைப் பகுதியில் விரிந்த எரிமலை நிலப் பரப்பு வாய்ந்த 4 பெரிய எரிமலைகள் என எண்ணப் பட்டதும், சிறப்பாகக் கருதக் கூடியதும், மிகப் பெரியதுமான ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus mons) உள்ளது. இது வெள்ளிக் கோளில் உள்ள பெரிய எரிமலை பீட்டாவைப் போல் இரு மடங்கு உயரமும், புவியின் மிகப் பெரிய எரிமலையை விடப் பெரியதுமாகும். மைய எரிமலை முகப்பு (central caldera) எரிமலை எச்சங்களின் அதிக வெளிப்பாடு இருந்ததை உணர்த்துமாறு அதன் விளிம்பு அமைந்திருக்கிறது. ஏனைய மூன்று எரிமலைகள் 400 கி.மீ. விட்டமும், 19 கி.மீ. உயரமும் உடையன. இதன் வடக்குப் பகுதியில், ஆல்பா பாட்டிரா (alba patera) என்ற சீரற்ற அமைப்பு 1600 கிமீ. விட்டமுடைய எரிமலைத் தோற்றமாகக் காட்சியளிக்கிறது. இக்கோளின் மீப்பெரு எரிமலையாகத் தோற்றம் அளிக்கும் ஆல்பா பாட்டிரா செவ்வாய் தோன்றியது தொடங்கி, இது நாள் வரை எரிமலை குமுறல் செய்த வண்ணம் செயற்பாடு பெற்றுள்ளது. பிளவு வெடிப்பு, நீண்ட தொட்டி, பள்ளத்தாக்குகள். தார்சிஸ் எரிமலை. 5000 கி.மீ. குறுக்களவு உடையதாகவும், ஏறக் குறைய 7 கி.மீ. அளவுக்கு மிகப் பெரிய உயர்த்தப் பட்ட பகுதியாகவும் புடைத்து (bulge) அமைந்து இருக்காது. தொகுப்பு செவ்வாய் மையம் குளிர்ந்ததும், விரிவடைந்ததால், இவ்வாறு புடைத்து இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இதன் வடக்குப் பகுதியில் நீண்ட தொட்டி போன்ற அமைப்புகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடையவையாக உள்ளன. கிழக்குப் பகுதியில் உள்ள வாலிஸ் மாரினரிஸ் (vailis marineris) ஆற்றுக் குடைவு (canyons) அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தன. பல கிலோ மீட்டர் ஆழத்துடன் 4000 கி.மீ. நீளமுடையதாகக் கோளுக்குக் குறுக்கே நடுவரைக்கு இணையாகச் சென்று, கிழக்குப் பகுதியில் காணப்படும் வடக்குத் தெற்காக அமைந்த கிரைஸ், நீண்ட தொட்டியுடன் இணைகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> துணைக் கோள்கள். மெரினர், வைக்கிங் சுற்றிகள் வெளியிட்ட விவரங்களினால், துணைக் கோள்களின் சுழற்சிக் காலம், கோளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகியவற்றைப் பற்றி அறிய முடிந்தது. 1877ஆம் ஆண்டில் செவ்வாயின் இரு துணைக் கோள்களான ஃபோபாஸ் (phobos). டெய்மாஸ் (deimos) இரண்டையும் கண்டு பிடித்தனர். ஃபோபாஸ், செவ்வாய்க்கு அண்மையில் 9350 கி.மீ. தொலைவில் செவ்வாய்ச் சுற்றுக்கு நேர் திசையில் இயங்கி வருகிறது. அதனால், அது மேற்கில் தோன்றிக் கிழக்கில் மறைவது போல் தோன்றுகிறது. டெய்மாஸ் செவ்வாய்க்கு 23940 கி.மீ. தொலைவில் வலம் வருகிறது. ஃபோபாஸ் தன் தாய்க் கோளைச் சுற்றி வர 7 மணி 39 நிமிடம் எடுத்துக் கொள்ளும். எனவே, ஃபோபாஸ் ஒரு நாளில் இரு முறை தோன்றுகிறது. செவ்வாயின் வளி மண்டல அழுத்தம் 7.4 X 10-3 வளி மண்டலங்கள். அதன் சராசரி வெப்ப நிலை 230K (43°C). கோடையில் இது 269K (-4°C) ஆகவும், குளிர் காலத்தில் 150K (-123°C) ஆகவும் இருக்கும். புளியில் உள்ளது போல், செவ்வாய்க்கு இரு துருவப் பகுதிகள் உண்டு. அங்கு உறை பனி வெண்மையாக மூடியிருப்பது போலவும், கோடையில் அளவு குறைந்தும், குளிர் காலத்தில் மிகுதியாகவும், தொப்பிகள் போன்று காட்சியளிக்கின்றன. தற்போது, உயிரினம் செவ்வாயில் வாழவில்லையென வானியலார் பலர் அறுதியிட்டுக் கூறினாலும், அங்கு உயிரினம் வாழக் கூடிய சூழ்நிலை இருக்கலாம் என்ற ஐயம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. —கே. இராஜேந்திரன் நூலோதி. James S. Pickering, Captires of the Sun, Sterling Publishing Pvt. Ltd., New Delhi, 1967.