இன்கிராம் சான் கெல்சு
iṉkirām cāṉ kelcu
அயர்லாந்து பொருளியல் வல்லுநர்களுள் தலையான இடம்பெற்றவர்.
அயர்லாந்து பொருளியல் வல்லுநர்களுள் தலையான இடம்பெற்றவர். இவர் ஆங்கில வரலாற்றுப் பள்ளியில் (British Historical School) சிறப்பிடம் பெற்றிருந்தார். இவருடைய படைப்புகளுள் 1878–இல் வெளியான ‘இப்போதைய அரசியல் பொருளியலின் நிலைமையும் வளமையும்’ (The Present Position & Prospects of Political Economy) என்ற நூலும் ‘அரசியல் பொருளியலின் வரலாறு’ (A History of Political Economy) என்ற நூலும் புகழ்பெற்றவை. அரசியல் பொருளியலின் வரலாறு வரையறுக்கப்பட்ட சிறப்பு நூலாகக் கருதப்பட்டுப் பல பதிப்புகள் வெளியாயின. இவர் காலத்திற்குப் பின்பும் 1915–ஆம் ஆண்டில் வில்லியம் எ. இசுகாட் (William A. Scott) என்பவரின் முன்னுரையுடன் புதிய பதிப்பு வெளியாயிற்று.
‘இப்போதைய அரசியல் பொருளியளின் நிலைமையும் வளமையும்’ என்ற நூல் ஆங்கில அறிவியல் வளர்ச்சிக் கழக மாணவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அக்காலப் பொருளியல் கோட்பாடுகளுக்கு எதிரான இன்கிராமின் (Ingram John Kells) அறிவியல் கருத்துக்கள் இந்நூலின் வாயிலாக வெளி வந்தன. அவை இன்றும் முடிவு காணாத ‘அறிவியல் என்றால் என்ன?’ ‘பொருளியல் அறிவியலைச் சார்ந்ததா?’ என்ற ஆய்வுகளுக்கு மூலக் கருத்துகளை வழங்கியுள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 555)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgvvdhgv/
தமிழ்“இன்கிராம் சான் கெல்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vgvvdhgv/APA
Oliyon Research. (2026). இன்கிராம் சான் கெல்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vgvvdhgv/MLA
"இன்கிராம் சான் கெல்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vgvvdhgv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment