சால்பியூட்டமால்
cālpiyūṭṭamāl
இம்மருந்து β ஏற்பிகளை மட்டும் தனித்துத் தூண்டும் திறன் உடையது.
இம்மருந்து β ஏற்பிகளை மட்டும் தனித்துத் தூண்டும் திறன் உடையது. இது சாலிகினின் என்ற வேதிப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. N-மூவிணைய பியூட்டைல் தொகுப்பு இதில் பக்கச் சங்கிலியாக (side chain) உள்ளது. இதன் அமைப்பு கீழ்வருமாறு அமைந்துள்ளது.
செயல்திறன். β ஏற்பிகளை மட்டும் இது தனித்துத் தூண்டுவதால் ஏற்கப்பட்ட மருந்தியல் அளவுகளில், இதயத் தூண்டுதல் எதுவுமின்றி, மூச்சுக் குழாயை விரிவடையச் செய்கிறது. மேலும், ஒவ்வாமையின் விளைவாக நுரையீரல் களஞ்சிய நுண்ணியங்களிலிருந்து (mast cells) ஹிஸ்ட்டமின், வியூகோட்ரின் போன்ற வேதிப் பொருள்களின் வெளியேற்றத்தைத் தடுக்கிறது. ஆஸ்த்துமா நோய் நிலைகளில், சுவாசக் குழல் அடைப்பு, மூச்சுக் குழல் இறுக்கம், சளி இறுகல், மூச்சுக் குழல் சீதச் சவ்வு வீக்கம் போன்றவை காரணமாகின்றன. இவை அனைத்தும் β ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் தடுக்கப்படுகின்றன. மேலும், ஆக்சிஜன் குறைந்த நிலைகளில் (hypoxic states) கார்பன் டைஆக்சைடின் சுவாச இயக்கத் தூண்டு திறனைச் சால்பியூட்டமால் அதிகரிக்கிறது.
மருந்தியல் இயக்கம். இம்மருந்தை அழுத்தத்துடன் கூடிய காற்றுக் கரைசலாக (aerosol) மூச்சு உள்ளிழுக்கும் போது, நேரடியாக வாய் வழியே மூச்சுக் குழலை வந்தடையுமாறோ, வாய் வழியாக வில்லை அல்லது நீர்ம வடிவிலோ, ஊசி மூலமோ உடலினுள் செலுத்த இயலும். காட்டகால்—O—மெத்தில் டிரான்ஸ்ஃபரேஸ் அல்லது சல்ஃபட்டேஸ் இவற்றின் மூலம் இது திறன் இழக்காமல் நீண்ட நேரம் β ஏற்பிகளைத் தூண்டுகிறது. சராசரியாக இம்மருந்தின் இயக்கம் சுமார் 4 மணி நேரம் வரை இருக்கும்.
மருந்தின் பயன். ஆஸ்த்துமா நோய் மருத்துவத்தில் இது பெரிதும் பயன் அளிக்கிறது. இம்மருந்தை 4 மி.கி. கொண்ட வில்லைகளாகவோ, நீர்மமாகவோ வாய் வழியாகச் செலுத்தலாம். இவ்வகை மருத்துவத்தில் வாய் வழிச் செல்லும் மருந்தில், உடல் ஏற்கும் மருந்தின் அளவு நிலையாக இல்லாமை குறிப்பிடத்தக்கது. சுமார் 100 மைக்ரோ கிராம் அளவு மருந்தை நேரடியாக வாய் வழி அளித்தால், மூச்சுக் குழலை வந்தடைகிறது. சாதாரணமாக, நான்கு மணிக்கு ஒரு முறை, மேற்கூறியவாறு ஒன்று அல்லது இரண்டு முறை இம்மருந்தைப் பயன்படுத்தினால் மிகு நன்மை கிட்டும்.
மேற்கூறிய முறை பயன் அளிக்காத நிலையில், மருந்தை ஊசி மூலம் தோலுக்கு அடியில் அல்லது தசையினுள் 500 மைக்ரோகிராம் அளவில் 4 மணிக்கு ஒரு முறை செலுத்தலாம். சில நேரங்களில் 250 மைக்ரோகிராம் அளவு மருந்தை இதய நோய்க்குக் குருதி நாள வழியே மிக மெதுவாகச் செலுத்துவது தொடர் மூச்சு இளைப்பு நிலைகளில் (status asthmaticus) பெரிதும் உதவும்.
மூச்சு இளைப்புத் தீவிரமாக உள்ள நிலைகளில் உதவும் வண்ணம் தற்போது இவ்வேதி மருந்து மூச்சு இயக்கிக் கரைசலாகவும் கிடைக்கிறது. 0.5% சால்பியூட்டமால் கரைசல் மருந்து அதிக அளவு ஆக்சிஜன் கலந்த காற்றுடன், விட்டு விட்டு நேர்முக அழுத்த முறையாக மூச்சு இயக்கி மூலம் செலுத்தப்படுகிறது. இம்முறையில் சுமார் 10 மி.கி. சால்பியூட்டமால் 3 நிமிடங்களில் செலுத்தப்படுகிறது.
சூலுற்ற பெண்களின் இறுதிப் பருவத்திற்கு முன்பே நிகழும் சிக்கலற்ற மகப்பேற்றின் போதும் இம்மருந்து பயன்படுகிறது. கைத்தசை நடுக்கம், மார்புப் படபடப்பு ஆகியவை வாய் வழியே அதிக அளவு மருந்தினை ஏற்கும் நிலைகளில் தோன்றும் விரும்பத் தகாத பக்க விளைவுகள் ஆகும். —கே.என். ராஜன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 137)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfezex3r/
தமிழ்“சால்பியூட்டமால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vfezex3r/APA
Oliyon Research. (2026). சால்பியூட்டமால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vfezex3r/MLA
"சால்பியூட்டமால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vfezex3r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment