பிண்டாரிகளின் தலைவர்களுள் ஒருவன். பிண்டாரிகள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தினர். இரு (Hiru) அவர்களின் தலைவன், புரான் (Buran), சிட்டு (Chitu) வாசில் முகமது (Wasil Muhammad), கரீம் கான் போன்றோர் ஏனைய தலைவர்கள். ‘இவர்கள் போர்க்குணம் படைத்த தலைவர்கள்’ ஆயினும் போராட விரும்பாதவர்கள். இவர்கள் கொள்ளையடிப்பதையே கண்ணும் கருத்துமாகச் செய்தனர். இவன் ஆங்கிலேயருக்கு மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். பிண்டாரிகளை ஆங்கில அரசுப் பேராளரான ஏசுடிங்சு (Hastings) பிரபு அழித்தார்.