பாகிசுத்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாக்கு மாவட்டத்தின் தலைநகர், சிந்து நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பெசாவரிலிருந்து ஏறத்தாழ 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அட்டாக்கிலுள்ள (Attock) மலைகளுக்கிடையே ஓடும் சிந்து ஆறு இந்நகருக்கு அழகிய தோற்றத்தினை அளிக்கிறது. அக்பர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டியுள்ளார். இந்நகருக்கு அருகே எரிபொருள் (Petroleum) எண்ணெய்க் கிணறுகள் உள்ளன.