இது ஒரு வகை எதிர் வினைச் சுழலியாகும். இதன் ஓடியில் (runner) உள்ள அலகுகள் (blades) மறைக்கப் படாமல் வெளிப்படையாகவே இருக்கும். ஊற்றுக் கோல் தாங்கியிலிருக்கும் (penstock) நீர், சுருள் உறையில் நுழைந்து, புழை வாயில் (wicket-gate) வழியாக ஓடிக்கும். இழுவைக் குழாய்க்கும் செல்லும். இதற்கு நிலைப்பு வளையங்கள் பயன் படும். இறுதியாக, பின் கை நீர்த் தேக்கத்திற்குச் (tail water reservoir) செல்லும். இச்சுழலியில் அலகுகள் நிலையானவையாகவோ, சீராக்கக்கூடியவையாகவோ இருக்கும். 4–9 அலகு- களைக் கொண்டிருக்கும். நிலையான அலகுகள் செலுத்தும் சுழலியில், அலகுகள் நிலையான இடத்தில் இருக்கும். சீர் செய்யக் கூடிய அலகுகள் செலுத்தும் சுழலியில், அலகுகளின் கோணங்கள் சீர் செய்யக் கூடியவையாக இருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் ஆரம்பத்தில் / கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> நிலையான அலகுகள் ஓடியில், அலகுக் கோணம் 20–28° வரை இருக்கும். சீராக்கக் கூடிய அலகுகள் ஓடியில், அலகுக் கோணம் 6–35° வரை இருக்கும். பற்சக்கரத் தொடர் மூலம் மின்னோடி (motor) வழியாகவோ, கையினாலேயோ அலகுகளைச் சீர் படுத்தலாம். எண்ணெய் அழுத்தத்தால் இயக்கப் படும் அலகுகள், தற்போது முதன்மை பெறுவதால், இம்முறை கை விடப் பட்டது. இவற்றைக் கப்லான் சுழலி (kaplan turbine) என்றும் கூறுவர். படம் 2இல் கப்லான் சுழலியின் ஏற்ற வெட்டுத் தோற்றம் காட்டப் பட்டுள்ளது. முதன்மை அச்சுத் தண்டினுள் இருக்கும் எண்ணெயால் இயங்கக் கூடிய உந்து தண்டு மூலம் அலகுகள் சீராக்கப் படுகின்றன. இயங்கும் உந்து தண்டை ஓடியின் குடத்திலும் (hub) வைக்கலாம். உந்து தண்டிற்கு மேலும், கீழும் எண்ணெய் உட்செல்வதற்கும், வெளியேறுவதற்கும் எண்ணெய் வழங்கி (oil distributor) பயன் படுகிறது. இது மின்னாக்கியின் (generator) உச்சியிலோ, அச்சுத் தண்டைச் சுற்றி மின்னாக்கியின் கீழோ அமைந்திருக்கும். ஆளிகை எண்ணெய்–அழுத்த முறை (governor oil–pressure system) மூலம் எண்ணெய்க்கு அழுத்தம் வழங்கப் படும். எண்ணெயின் ஓட்டத்தை ஆளிகை கட்டுப் படுத்தும். கட்டுப் படுத்தியில் ஒரு நெம்புருள் (cam) இருக்கும். அலகின் நிலை, புழை வாயிலின் நுழைவிற்கேற்ப மாறக் கூடியதாக இருக்கும். —இரா.இந்து நூலோதி. Donald G. Fink, H. Wayne Beaty, Standard Handbook for Electrical Engineers, Eleventh Edition, McGraw-Hill Book Company, New York, 1978.