புராணம்

purāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராணம்)
2.
பழங்கதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராணம்)
3.
அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராணம்)
4.
கோயிலில் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராணம்)
5.
பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரம்மகைவர்த்தம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், காருடம், வாயவியம், (பதிணெண்புராணம்) (மார்க்கண்டேயம்,சைவம், பவிடியம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், வாயவியம், சிவபரத்துவம் கூறும்) (வைணவம், பாகவதம், நாரதீபம், காருடம், விஷ்ணுபரத்துவம் கூறும்) (பதுமம், பிரமம், பிரம்ம வரத்துவம் கூறும்) ஆக்கினேயம் அக்கினியின் சிறப்புக்கூறும்) (பிரம்ம கைவர்த்தம் சூரியன் பெருமை கூறும்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 428)
6.
உலகத் தோற்றம், ஒடுக்கம், தலைமுறைகள், மரபு வழிக் கதைகள் முதலியவற்றைக் கூறுவதால், ஐந்தழகு உடையது இது. புராணங்கள் ஒன்றுக்கு மற்றொன்று மாறுபடுவன போல் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை கொண்டவை. உயர் நெறிகளைப் புகட்டுபவை. எ-டு பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 205)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7mrnz8a/

தமிழ்
“புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7mrnz8a/
APA
Oliyon Research. (2026). புராணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v7mrnz8a/
MLA
"புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7mrnz8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment