கேட்கும் திறன் குறைதல் அல்லது முழுதுமாகக் காது கேளாதிருத்தல் செவிட்டுத் தன்மை எனப் படும். 8ஆம் சுபால நரம்பு பாதிக்கப்படும் போதும், சாலிசிலேட், குயினின் போன்ற மருந்துகள் உட்கொள்ளும் போதும், புறச் செவிக் கால்வாய், செவிப் பறை ஆகியன பாதிக்கப்படும் போதும், செவிட்டுத் தன்மை உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஆய்வின் போது, ஒரு காதை மூடிக் கொண்டு, மற்றக் காதினருகே கைக்கடிகாரத்தையோ, இசைக் கவையையோ (tuning fork) வைக்கலாம். இசைக் கவை தவிர, மின்னாற்றல் கொண்ட கேள் அளவி அல்லது கேள் திறன் வரைபடத்தைக் (audiogram) கையாளலாம். செவிட்டுத் தன்மை இரண்டு வகைப் படுகிறது. நரம்பு நோய். இதில் காதின் சுருள் வளையமோ, (cochlea) 8 ஆம் கபால நரம்பிழைகளோ பாதிக்கப் படும். கடத்தல் திறன் குறைவு (conduction defect). நடுச் செவி எலும்புகள் நெகிழ் தன்மையிழந்து கடினமடைதல், நடுக் காது சீழ் நிலை, புறச் செவிக் கால்வாய் அடைபடுதல், நடுச் செவிக் குழல் பாதிக்கப் படல் ஆகியவற்றில் இந்நிலை ஏற்படுகிறது. இவற்றை அறுதியிடப் பல வகையான திறன் கொண்ட இசைக் கவைகளைப் பயன்படுத்தலாம். இரண்டு முக்கியமான ஆய்வுகள் செய்யப் பட்டுச் செவிட்டுத் தன்மையின் காரணம் அறுதியிடப் படுகிறது. வீபர்ன் ஆய்வு. நோயாளியின் நெற்றி மையத்தில் அதிர்வுடன் கூடிய இசைக் கவையை வைத்தால், நடுச் செவி பாதிப்பில் தாக்கமுற்ற காதில் ஒலி கேட்கும். நரம்புத் தொடர்பான செவிட்டு நிலையில் நன்கு கேட்கும். ரின்னி ஆய்வு. இசைக் கவை, மாஸ்டாய்டு துருத்தியின் மீது வைக்கப் படுகிறது. மற்றக் காது, விரலால் மூடப் படுகிறது. அதிர்வு நின்றவுடன், இசைக் கவை புறச் செவித் துளையின் அருகே வைக்கப் படுகிறது. நடுச் செவியின் செவிட்டுத் தன்மையில், இசைக் கவையின் ஒலி கேளாது. நரம்புத் தொடர்பான செலிட்டுத் தன்மையில், மேற்கூறியதற்கு எதிர் மாறாகக் கேட்கும். நடுச் செவிச் சீழ் நிலை, நடுச் செவி எலும்புகளின் கடினமடைந்த நிலை, செவிப் பறை கிழிந்து விடல் போன்றவையே செலிட்டுத் தன்மையின் பொதுவான காரணங்களாகும். நரம்புச் சார்ந்த செவிட்டுத் தன்மைக்குப் பிறவி ஊனம், மூளை உறை அழற்சி. மூளையில் தோன்றும் புற்றுக் கட்டிகள், மேக நோய், மருந்துகள், அறுவை ஆகியன காரணமாகலாம். —மு. ப. கிருஷ்ணன்