அட்சன் என்றி
aṭcaṉ eṉṟi
என்பார் ஆங்கிலப் புத்தாய்வுப் பயணியும் கப்பல் தலைவருமாவார்.
என்பார் ஆங்கிலப் புத்தாய்வுப் பயணியும் கப்பல் தலைவருமாவார். இவரது இளமைக் காலத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. இவர் கி.பி. 1611–இல் காலமானார் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நான்கு பயணங்களை மேற்கொண்டு வடக்குத் தடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் அட்சன் என்றி (Hudson Henry). ஆனால் அட்சனால் அத்தகைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் வடக்குத் திசையில் பயணம் செய்து வந்த பயணிகளைவிடத் தொலை தூரம் சென்று வந்தவர் ஆவர். அட்சன் ஆறு, அட்சன் விரிகுடா, அட்சன் நீர்ப்பிரிவு என்று
அட்சன் என்றி கூறப்படும் மூன்று நீர்நிலைகனைத் தம் ஆய்வுப் பயணம் மூலம் கண்டறிந்தவர் இவர், எனவே இவரது பெயராலேயே அம்மூன்று நீர்நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது இவருக்குப் பெருமை சேர்க்கும்.
அட்சன் இங்கிலாந்திலிருந்து ‘ஆப்வெல்’ என்னும் கப்பலில் தம் இளைய மகன் சான் என்பானுடனும் பத்து மாலுமிகளுடனும் புறப்பட்டார். இவர் கிரீன்லாந்துக் கடற்கரையின் வடகிழக்காகப் பயணம் செய்து இசபீட்சுபர்கள் (Spitsbergen) என்னும் தீவுகளைச் சேர்ந்தார். இத்தீவுகள் வடதுருவத்திலிருந்து 1,100 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தன. மிதக்கும் பெரும் பனிக்கட்டிகள் அட்சனை மேற்கொண்டு பயணம் செய்ய முடியாது தடுத்தமையால், இங்கிலாந்து திரும்ப வேண்டியவரானார்.
ஆங்கில வணிகர் சிலர் கி.பி. 1610–இல் வணிகக்குழு ஒன்றை நிறுவி அட்சனைப் புதிய பயணம் ஒன்றைச் செய்யப் பணித்தனர். இவர் அட்லாண்டிக்குப் பெருங்கடலைக் கடந்து இலாப்ரடார் கடற்கரைவரை பயணம் செய்தார். இவர் பெரும் தொல்லைகளினூடே பயணம் செய்து அட்சன் நீர்ப் பிரிவைக் கண்டார். பின்னர், அதுவே அட்சன் விரிகுடாவைக் கண்டுபிடிக்க உதவியது.
அட்சன் கி.பி. 1611–ஆம் ஆண்டு சேம்சு விரிகுடாவிலிருந்து மேற்கில் பயணம் செய்து வழி காணவேண்டுமென்று நினைத்தார். ஆனால் இவர் துணைவர்களுள் சிலர் கலகம் செய்தனர். அட்சன் தம் மகனுடனும் சில மாலுமிகளுடனும் ஒரு சிறிய படகை எடுத்துக் கொண்டு பயணமானார். ஆனால் இவர் திரும்பி வரவேயில்லை.
கலகம் செய்த ஏனைய மாலுமிகள் இங்கிலாந்திற்குத் திரும்பினர். அட்சன் விரிகுடாவிலிருந்து பசிபிக்குப் பெருங்கடலுக்குப் போக முடியும் என்னும் நம்பிக்கையை இவர்களின் அறிக்கை அளித்தது. அட்சனின் இறுதிப் பயணத்தின் அடிப்படையிலேயே அட்சன் விரிகுடாவைச் சுற்றியிருந்த பெரும் பரப்பை இங்கிலாந்து உரிமை கொண்டாடியது. இப்பகுதியில் பயணம் செய்ததன் பயனாக, கி.பி. 1670–இல் அட்சன் விரிகுடா வணிகக்குழு நிறுவப்பெற்று, மென்மயிர்த் தோல் வாணிகம் பெருகலாயிற்று.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 203)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2m3ns68/
தமிழ்“அட்சன் என்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v2m3ns68/APA
Oliyon Research. (2026). அட்சன் என்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v2m3ns68/MLA
"அட்சன் என்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v2m3ns68/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment