இரும்பூளை
irumpūḷai
தேவாரப் பாடல்பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று.
தேவாரப் பாடல்பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. இவ்வூர் கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது இப்பொழுது ஆலங்குடி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளார். அதன்கண் இத்தலத்தினை, ‘எழிலார் இரும்பூளை’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் காசி ஆரணியேசுவரர்; இறைவி பெயர் ஏலவார் குழலி. பூளை என்னும் செடியின் பெயரால் இத்தலம் இரும்பூணை என்னும் பெயர் பெற்றது. இத்திருக்கோயிலுள்ள ஆலமர் செல்வனாகிய தட்சிணாமூர்த்திக் கூடம் சிறப்பு மிக்கதாகும். வியாழக்கிழமைகளில் இங்கு வழிபாடு நிகழ்த்துதல் மிக்க சிறப்புடையதாகச் கருதப்படுகிறது. விழாக்காலத்தில் தட்சிணாமூர்த்தித் திருமேனியைத் தேரில் எழுந்தருளச் செய்வர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 232)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzfbyp73/
தமிழ்“இரும்பூளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uzfbyp73/APA
Oliyon Research. (2026). இரும்பூளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzfbyp73/MLA
"இரும்பூளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uzfbyp73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment