இராமசாமி அடிகள்
irāmacāmi aṭikaḷ
20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; வடஆர்க்காடு மாவட்டம் கீழ்வல்லம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; வடஆர்க்காடு மாவட்டம் கீழ்வல்லம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தை கிருட்டிணக் கவுண்டர். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இளம்பருவத்திலேயே துறவு பூண எண்ணிக் கோவலூர் மடத்திற்குச் சென்றார். அங்கு மகாதேவ சாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்ற இவர் அம்மடத்தின் காரியங்களை மேற்பார்வை செய்து வந்தார். பிறகு இவர் காசி முதலிய புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். திருக்காளத்திக்குச் சென்று மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார். அதன்பிறகு சேலத்திற்குப் பக்கத்திலுள்ள தலமலை, சொர்ணபுரியை யடுத்த கோகுலம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பலருக்கும் வேதாந்த நூல்களைக் கற்பித்தார். இவர் சச்சிதானந்த போதம், அத்துவைத ஞானாமிருதம், பிரார்த்தனைமாலை ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 109)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyres5jv/
தமிழ்“இராமசாமி அடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uyres5jv/APA
Oliyon Research. (2026). இராமசாமி அடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uyres5jv/MLA
"இராமசாமி அடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uyres5jv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment