ஆத்தி
ātti
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்றுக் குணக்கும் கோணலுமாக வளரும்.
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்றுக் குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். இலையடிச் செதில்கள் சிறியவை, விரைவில் உதிர்ந்துவிடும். பூங்கொத்து சிறு ரசீம். பூ சற்று ஒரு தளச் சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல்போல இருக்கும் ; நுனியில் 5 பற்கள் காணும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும்; வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை ; தழுவு அடுக்குள்ளவை ; மேற்பக்கத்து இதழ் எல்லாவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும். கேசரங்கள் 10; எல்லாம் செம்மையாக வளர்ந்திருக்கும். சூலகத்திற்குச் சிறு காம்பு உண்டு. பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும், 4-1 அங்குல அகலமும் இருக்கும். வெடிக்காது. மரத்தின் பட்டை சொரசொரப்பாகக் கருமையாக இருக்கும். மரம் பழுப்பு நிறமுள்ளது; கடினமானது. நல்லவிறகு. உள் பட்டையிலிருந்து நல்ல நார் எடுத்து முரடான கயிறு திரிப்பதுண்டு. ஆத்திக்கு ஆர் என்றும் பெயர். இது ஒருவித மந்தாரை ; பாஹீனியா ராசிமோசா (Bauhinia racemosa) எனப்படும். லெகுமினோசீ குடும்பத்தில் சீசால்பீனியீ உட்குடும்பத்தைச் சேர்ந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 411)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ur669fgh/
தமிழ்“ஆத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ur669fgh/APA
Oliyon Research. (2026). ஆத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ur669fgh/MLA
"ஆத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ur669fgh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment