சிறுநீர்ப் பை அழற்சி
ciṟunīrp pai aḻaṟci
வாழ்க்கையில் எந்த நேரத்திலும், முதிர்ந்த அல்லது நாட்பட்ட சிறுநீர்ப் பை அழற்சி ஆண், பெண் ஆகிய இரு பாலாரிடையும் ஏற்படுவது இயல்பு.
வாழ்க்கையில் எந்த நேரத்திலும், முதிர்ந்த அல்லது நாட்பட்ட சிறுநீர்ப் பை அழற்சி ஆண், பெண் ஆகிய இரு பாலாரிடையும் ஏற்படுவது இயல்பு. பொதுவாகப் பெண் பாலாரிடையே இது பரவலாக உள்ளது.
நோய் அறிகுறிகள். விந்தக வீக்க அடைப்பு, சிறுநீர்ப் புற வழி இறுக்கம், ஆண் குறிப் புறத் துளைச் சுருக்கம், சிறுநீர்ப் பைப் பக்க வளர்ச்சி, பேறு காலப் பின் நிலை, தண்டு வடக் காயம் முதலியவற்றால் சிறுநீர்ப் பையிலிருந்து முழுமையாகச் சிறுநீர் வெளிப்படுவதில்லை. சிறுநீர்ப் பையுள் கற்கள், பிற பொருள்கள், புற்றுக் கட்டிகள் இருப்பதும், வைட்டமின் பற்றாக்குறை நோய்க்கும், அவற்றால் ஏற்படும் வலிமையின்மைக்கும் காரணங்களாக அமையக் கூடும்.
இந்நோய், சிறுநீரகப் பாதிப்பிலிருந்து தொடங்கி, சிறுநீரகக் குழல் வழியாகச் சிறுநீர்ப் பையை அடையலாம். இவ்வாறே, சிறுநீர்ப் புறவ ழியிலிருந்து, சிறுநீர்ப் பையையும் தாக்கலாம், விந்தகம், விந்துப் பை, கருப்பைக் கழுத்து, மலக் குடல் இவற்றிலிருந்து உருவாகும் நுண்ணுயிர்த் தாக்கம் எளிதில் சிறுநீர்ப் பையை அடையலாம். அருகேயுள்ள குடல், யோனி, கருவகக் குழல் ஆகியவற்றிலிருந்தும் நோய் பரவலாம். பாதிக்கப்பட்ட உடலின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து, குருதி ஓட்டம் வழியாகவும் பரவலாம்.
எஷ்செரிச்சியாகோலை எனும் நுண்ணுயிரிகளே இந்நோய்க்குக் காரணமாகின்றன. ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ், புரோட்டியஸ் போன்றவையும் இந்நோயை உண்டாக்கலாம். இவற்றுடன், சிறுநீரில் சீழ் செல்கள் காணப்படும்; நுண்ணுயிரிகள் எதுவும் காணப்படாவிடில், காச நோய் அல்லது வெட்டை நோய் நுண்ணுயிரிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்துக் காரணிகளும் இல்லாவிடில், நுண்ணுயிரற்ற சிறுநீர்ப்பை அழற்சி என்றோ, சிறுநீர்ப் பைப் புற்று நோய் என்றோ முடிவு செய்ய வேண்டும்.
அறிகுறிகள். இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுகிறது. உடனடியாகச் சிறுநீர் போக முடியாவிடில், அடக்க முடியாமை நிகழ்கிறது. இந்நோயில் தோன்றும் தாங்க முடியாத வலி பூப்பிணைப்பின் மேற்பகுதி, ஆண் குறியின் நுனி, பெண்களில் பேரிதழ், குத இடுக்கு (perineum) ஆகிய பல இடங்களுக்குப் பரவுகிறது. சிறுநீரில் குருதியும் வெளிப்படுகிறது; சிறுநீர் கலங்கலாகவும் இருக்கும். சிறுநீர்ப் பை இருக்கும் இடத்தில் தொடு வலி காணப்படுகிறது. மலக் குடல் ஆய்விலும், யோனி ஆய்விலும் மேற்கூறிய வலியைத் தொட்டு உணரலாம். சிறுநீர்ப் பை உள்நோக்கி மூலம் பிணிக் கூறாய்வு எளிதாகிறது.
மருத்துவம். உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும். மிகை நீர் அருந்த நோயாளியைப் பணிக்க வேண்டும்; சல்ஃபா அல்லது நைட்ரோஃபுரண்டாயின் (100 மி.கி. மூன்று வேளை) பயனளிக்கிறது. பொட்டாசியம் சிட்ரேட்டும், கலந்த கலவையை 10 மி.லி. அலகில் நாளும் கொடுத்தால், சிறுநீர்ப் பைக்கு நலமளிக்கும். காச நோயில் உண்டாகும் சிறுநீர்ப் பை அழற்சிக்குக் காச நோய் எதிர் மருந்துகள் கொடுக்க வேண்டும். காச நோய்ச் சிறுநீர்ப் பை அழற்சியை, சிறுநீர்ப் பை உள்நோக்கி மூலம் முடிவு செய்யலாம். சிலேட்டுமப் படலம் வெளிறிக் காணப்படும். சளிச் சவ்வடி வீங்கிக் காணப்படும். சிறுநீர்ப் பை மிகவும் சிறியதாகக் காணப்படுவதால், அதை விரல் உறைச் (thimble) சிறுநீர்ப் பை என்பர். காசநோய் எதிர் மருந்துகள் தவிர சோப், 0.5% கரைசலாகச் சிறுநீர்ப் பையின் உட்செலுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பின் வெளியேற்றப்படுகிறது. நிலைமை சீரடையாவிடில், இலியமும், சிறுநீர்ப் பையும் அறுவை மூலம் இணைக்கப் படுவது நல்லது. —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 358)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqurjdna/
தமிழ்“சிறுநீர்ப் பை அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uqurjdna/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப் பை அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uqurjdna/MLA
"சிறுநீர்ப் பை அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uqurjdna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment