இளஞ்சேரல் இரும்பொறை
iḷañcēral irumpoṟai
பதிற்றுப்பத்தால் அறியலாகும் சேர வேந்தருள் ஒருவன்.
பதிற்றுப்பத்தால் அறியலாகும் சேர வேந்தருள் ஒருவன். குடக்கோ இருஞ்சேரல் இரும்பொறை என்றும் குறிக்கப்பட்டுள்ளான். பதிற்றுப்பத்தினால் அறியப் பெறும் சேர வேந்தர் உதியஞ்சேரல் மரபினர். இரும்பொறை மரபினர் என இருவகைப்படுவர். இம்மன்னன் இரும்பொறை மரபினைச் சேர்ந்தவனாவான். இவனைப் பெருங்குன்றூர் கிழார் என்னூர் புலவர் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தில் பாடிப் பாராட்டி- யுள்ளார். இவர் தம் பாடலொன்றில் (பதிற் 88,5,14) இவ்வரசனின் முன்னோருள் அறுவரை அவர் தம் சிறப்புச் செயலாற் சுட்டி, அத்தகையோர் மரபில் வந்தவன் எனச் சிறப்பித்துள்ளார். இவன் தந்தை பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை. இம்மன்னன் பரிசில் நல்கும் காலம் நீட்டித்தமை அறிந்து, இவர் தாம் வருந்திச் செல்வதாகப் புறநானூற்றுப் பாடலில் (புறம். 210) குறிப்பிட்டுள்ளார்.
இம்மன்னன் படையொடு சென்று எதிர்த்த விச்சி என்பானையும் ஏனைய இருபெரு வேந்தரையும் கொன்று, ஐந்து அரண்மனைகளைக் கைப்பற்றினான். கோப்பெருஞ்சோழனையும் இளம்பழையன் மாறனையும் தான் கூறிய வஞ்சினம் பிழையாதவாறு வென்று, கைக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் தன் தலைநகராகிய வஞ்சி நகருக்குக் கொணர்ந்து, மற்றவர்களுக்கு வழங்கினான். தன் அமைச்சனான மையூர்கிழானைப் புரோகிதனினும் மேலாக அறநெறி அறிபவனாக மதித்தான். சதுக்கப் பூதங்களைக் கொணர்ந்து தன் நகரில் நிறுவி, அவற்றிற்குக் களவேள்வியால் சாந்தி செய்தான். இவை பதிகத்தாலறிந்தவை.
இம்மன்னன் தன்மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்துப் பாடல்களுக்காக அவற்றைப் பாடிய பெருஞ்சாத்தனாருக்கு 32 ஆயிரம் காணம் பொன் அளித்தான். அவருக்குத் தெரியாமல் ஊர், வீடு, அணிகள் ஆகியவற்றை நல்கினான். இம்மன்னன் 16 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 483)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up2m7469/
தமிழ்“இளஞ்சேரல் இரும்பொறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/up2m7469/APA
Oliyon Research. (2026). இளஞ்சேரல் இரும்பொறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/up2m7469/MLA
"இளஞ்சேரல் இரும்பொறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/up2m7469/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment