பட்டை நிற மாலை
paṭṭai niṟa mālai
நெருக்கமான நிற மாலை வரிகள் குழுவாகவோ, பட்டையாகவோ அமைந்த அலை வரிசை, பட்டை நிற மாலை எனப் படும்.
நெருக்கமான நிற மாலை வரிகள் குழுவாகவோ, பட்டையாகவோ அமைந்த அலை வரிசை, பட்டை நிற மாலை எனப் படும். மூலக் கூற்று நிலையிலுள்ள வளிமங்களும், வேதிச் சேர்மங்களும் இத்தகைய பட்டை அலை வரிசைகளை உண்டாக்கும்.
சிறிய அளவிலான பிரிகைத் திறன் கொண்ட ஒரு நிற மாலை காட்டியின் மூலம், மூலக் கூறுகளினால் வெளியிடப் படுகிறது அல்லது உட்கவரப் படுகிற ஒளியைப் பார்த்தால், நிற மாலையில் வரிகளுக்குப் பதிலாக, அகலமான சமச் சீர்மையற்ற பட்டைகள் தென் படும். இப்பட்டைகளில் ஒரு பெருமமான பொலிவு பெற்றிருக்கும். அந்த விளிம்பு, பட்டை முகப்பு (band head) எனப் படும். அதிலிருந்து, மற்ற விளிம்பை நோக்கிச் செல்லும் போது, பொலிவு குறைந்து கொண்டே போகும்.
சில பட்டை அலை வரிசைகளில், பொலிவு குறையும் திசை, குறைந்த அலை நீளப் பக்கத்திலும், வேறு சில பட்டை அலை வரிசைகளில், அதிக அலை நீளப் பக்கத்திலும் இருக்கும். ஒரு பட்டை அமைப்பில், ஏறத் தாழச் சமமான இடைவெளியில் முன்னேறி (progression) எனப் படும் பட்டைகள், வரிசையாக அமைந்திருக்கும்.
வெவ்வேறு முன்னேறிகளில் உள்ள ஒத்த நிலைப் பட்டைகள், வரிசைகள் எனப்படும் குழுக்களாக அமையும். உயர் பிரி திறன் கொண்ட நவீன நிற மாலை காட்டிகளைப் பயன்படுத்தி, இப்பட்டைகளை ஆராய்ந்தால், மூலக் கூற்று நிலை வளிமங்கள் வெளியிடுகிற பட்டைகளில் பெரும்பாலானவை மிக நெருக்கமாக அமைந்த வரிகளாலானவை என்பது புலனாகும். அவற்றின் பொலிவுகள் சமமாகவும், அவற்றின் இடைவெளிகள் மிக நுண்ணியவையாகவும் இருப்பதால், அந்த வரிக் கூட்டம் ஒரே பட்டையைப் போலத் தோற்றமளிக்கிறது. —கே. என். ராமசந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 453)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujzs5n7t/
தமிழ்“பட்டை நிற மாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ujzs5n7t/APA
Oliyon Research. (2026). பட்டை நிற மாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujzs5n7t/MLA
"பட்டை நிற மாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ujzs5n7t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment