சூழ்வளிப் புற வெப்ப இயல்
cūḻvaḷip puṟa veppa iyal
உலர் காற்றும், நீராவியும் கலந்த கலவையைப் பற்றி விளக்கும் அறிவியலின் ஒரு பகுதி, சூழ்வளிப் புற வெப்ப இயல் எனப்படும்.
உலர் காற்றும், நீராவியும் கலந்த கலவையைப் பற்றி விளக்கும் அறிவியலின் ஒரு பகுதி, சூழ்வளிப் புற வெப்ப இயல் எனப்படும். காற்றுக் குளிரூட்டல் சுமை, இரும்பு அமைப்புகள் வழியாக நிகழும் வெப்பச் செலுத்துதல், குளிரூட்டும் கோபுரங்கள் போன்றவற்றைக் கணக்கீடு செய்வதற்கு இவை அடிப்படையாக உள்ளன. வளி மண்டலம் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கார்பன் டைஆக்சைடு, நீராவி போன்ற பல வளிமங்களின் கலவையாகும். ஆனால், பொதுவாக, குளிர்விப்புக் கணக்கீடுகளுக்காக வளி மண்டலம் காற்றும், நீராவியும் கலந்ததாகக் கருதப் படுகிறது. முதன்மை வரையறைகள் உலர் காற்று. அனைத்துலக இணைக் குழுவின் கூற்றுப்படி, ஆக்சிஜன் -0.2095, நைட்ரஜன் -0.7809, ஆர்கான் -0.0093, கார்பன் டைஆக்சைடு 0.0003 என்னும் மூலக்கூறு விகிதங்களை உலர் காற்றுக் கொண்டுள்ளது.ஈரப்பதமிக்க காற்று. இது உலர் காற்றும், நீராவியும் கலந்த கலவையாகும்; நீராவியின் அளவு காற்றில் வெப்புநிலைக்குத் தக்கவாறு மாறும். நீராவி. காற்றில் கலந்துள்ள நீராவியே, ஈரப் பதம் எனப்படும். காற்றுக் குளிரூட்டலில், ஈரப் பதத்தின் அளவை அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். ஈரப் பதம் எவ்வளவு மிகுதியான நீராவியைத் தன்னால் பெற முடியுமோ, அந்த அளவைப் பெற்றால், ஈரப் பதம் நிறைவடைந்து விட்டதெனக் கொள்ளலாம். இவ்வகைக் காற்று, கண்களுக்குத் தெரிவதில்லை. இத்துடன் சிறிதளவு நீரைச் சேர்த்தால், நீர்த் துளி காற்றில் மிதந்து, மூடு பனியை உருவாக்கும்.
காற்றும், நீராவியும் கலந்த கலவையின் வெப்ப நிலை, நீராவியின் சமன்படு வெப்ப நிலையை விட மிகுதியாக இருப்பின், நீராவி மிகுதியாகச் சூடாக்கப் பட்ட நிலையில் உள்ளது எனலாம். தனி ஈரச் செறிவு அல்லது ஈரச் செறிவு விகிதம் என்பது நீராவியின் எடைக்கும், காற்றும் நீராவியும் கலந்த கலவையில் உள்ள உலர் காற்றின் தனி எடைக்கும் உள்ள விகிதம் ஆகும்.
முதல் ஈரச் செறிவு அல்லது நீராவியின் அடர்த்தி. இது காற்று, நீராவிக் கலவையில் உள்ள நீராவியின் எடை (கி.கி./மீ³.) ஆகும்.
ஈரப் பத விகிதம். இது நீராவியின் எடைக்கும், அடிப்படை அளவிலான நீராவிச் சாற்றுக் கலவையில் உள்ள உலர் காற்றின் எடைக்கும் உள்ள விகிதம் ஆகும்.
சமன் படு நிலை. இது ஒரே உலர் குடுவை வெப்ப நிலை மற்றும் அழுத்தம் இவற்றில் வழக்கமான ஈரப் பத விகிதத்திற்கும், சமன் நிலை ஈரப் பத விகிதத்திற்கும் உள்ள விகிதம் ஆகும். W = ஒரு கிலோ உலர் காற்றில் அடங்கியுள்ள ஈரப் பதம் எனவும், Wg = ஒரு கிலோ உலர் காற்றை, அதே உலர் குடுவை வெப்ப நிலையில் சமன்படுத்தத் தேவையான ஈரப் பதம் எனவும் கொண்டால், μ =
தனித்த ஈரப்பதம் அல்லது ஆவியின் அடர்த்தி. கன மீட்டர் (மீ³) கன அளவுள்ள காற்று மற்றும் ஆவி கலந்த கலவையில் உள்ள நீராவியில் உள்ள எடையே தனித்த ஈரப் பதம் அல்லது ஆவியின் அடர்த்தி எனப்படும்.
சார்பு ஈரப் பதம். இது கொடுக்கப்பட்ட கன அளவிலுள்ள நீராவியின் உண்மையான எடைக்கும், காற்று நிறைவடையும் போது வெப்ப நிலை கொண்ட கன அளவில் உள்ள நீராவியின் எடைக்கும் உள்ள விகிதம் ஆகும்.
உலர் குடுவை வெப்ப நிலை. ஈரப் பத விகிதம் அல்லது வெப்பக் கதிர் வீச்சு இவற்றின் தாக்கம் இல்லாத வெப்ப நிலை அளவியில் பதிவு செய்யப் படும். வெப்ப நிலையே, உலர் குடுவை வெப்ப நிலை எனப் படும்.
பனிப் புள்ளி வெப்ப நிலை. ஈரப் பத விகிதத்திற்கும், பாரமானியின் அழுத்தத்திற்கும் உரிய சமன் படும் வெப்ப நிலை, பனிப் புள்ளி வெப்ப நிலை எனப்படும். இது ஈரப் பதம் மிகுந்த காற்றுக் கலவை சீரான அழுத்தத்தில் குளிர்விக்கப்படும் வெப்ப நிலையே ஆகும். உலர் குடுவை வெப்ப நிலைக்கும் பனிப் புள்ளி வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாடு பனிப் புள்ளி இறக்கம் எனப்படும்.
ஈரக் குடுவை வெப்ப நிலை. இது காற்றோட்டமுள்ள ஈரமான துணியால் சுற்றப் பட்டிருக்கும். குடுவையைக் கொண்ட வெப்ப நிலை அளவியில் கிடைத்த வெப்ப நிலை ஆகும். உலர் குடுவை வெப்ப நிலைக்கும், ஈரக் குடுவை வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாடு இறக்கம் எனப்படும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 704)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhn6mvvt/
தமிழ்“சூழ்வளிப் புற வெப்ப இயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uhn6mvvt/APA
Oliyon Research. (2026). சூழ்வளிப் புற வெப்ப இயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhn6mvvt/MLA
"சூழ்வளிப் புற வெப்ப இயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uhn6mvvt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment