அந்தோனினசு பயசு
antōṉiṉacu payacu
(கி.பி. 86–161) உரோமானியப் பேரரசர்களுன் ஒருவர்.
(கி.பி. 86–161) உரோமானியப் பேரரசர்களுன் ஒருவர். இவர் கி.பி.138 முதல் 161 வரை பேரரசராக இருந்தவர்; நேர்மைக்கும் மென்மைக்கும் பெயர் பெற்றவர்; உரோமானிய வரலாற்றில் அந்தோனினசு பயசு (Antoninus Pius) ஆட்சிக் காலத்தை அமைதிக்காலம் என்று கூறுவர்.
அந்தோனினசின் பதவிப் பெயர் டைடசு ஏலியசு அந்தோனினசு என்பதாம். இவர் செல்வமும் செல்வாக்கும் மிக்கதோர் குடும்பத்தில் பிறந்தார். பேரரசராவதற்கு முன்னர் இவர் இத்தாலியில் மேல் முறையீடுகள் நீதிமன்றத்தை நிருவகித்து வந்தார். மேற்கு ஆசியா மைனரில் ஆசியாவின் ஆளுநராகப் பணியாற்றி வந்தார். சட்டத்துறையில் இவருக்கு இருந்த அனுபவம், செல்வம், புகழ், செனட்டு அவையில்
அந்தோனினசு பயசு
இவருக்கிருந்த செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்திற் கொண்ட பேரரசர் ஆட்ரியன் (Hadrian), அந்தோனினசைத் தமக்கு அடுத்த பேரரசராகத் தேர்ந்தெடுத்தார். அந்தோனினசு பயசு வடபிரிட்டனில் அந்தோனைன் சுவரைக் கட்டினார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uentkbf4/
தமிழ்“அந்தோனினசு பயசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uentkbf4/APA
Oliyon Research. (2026). அந்தோனினசு பயசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uentkbf4/MLA
"அந்தோனினசு பயசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uentkbf4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment