சூல் பை அகற்றல்
cūl pai akaṟṟal
குலைக் கலைத்தல், கருப்பைத் தசை வளர்ச்சி, சூலக நோய், கருப் பைக்குப் பெருமளவிலான காயம், நிறுத்த முடியாத குருதிப் பெருக்கு, கருப் பைக் கட்டிகள், கூபக உறுப்புகளின் இடப் பெயர்ச்சி, உட்கருப்பையகப் புத்து வீச்சு (endometriosis), கருப்பை அல்லது கருப்பைக் கழுத்துப் புற்று நோய், தீங்கற்ற கட்டி (fibroid) ஆகிய நிலைகளில் சூல் பை அகற்றல் செய்யப்படும்.
கருப் பையை யோனி அல்லது வயிறு வழியாக அகற்றலாம். கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கு, வயிற்று வழி அறுவை செய்யப்படுகிறது. புற்று நோய்க்கு யோனி வழியாகவும், கருப்பையை அகற்றவாம். இவ்விரு அறுவை முறைகளைக் கையாளுவதிலும், பல செயல் முறைகள் உண்டு. சிலர் சூலகங்களையும் அகற்றி விடுகின்றனர். புற்று நோய்க்காக அறுவை செய்தோரில் 98 விழுக்காட்டினர் 5 ஆண்டுகளுக்கு உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது. அறுவை செய்து முடித்த பின்னர், கதிர் வீச்சு மருத்துவம் அளிப்பதா அல்லது புற்று நோய் எதிர் மருந்து அளிப்பதா என்பதை வல்லுநரே முடிவு செய்வார். —மு.கி. ராஜாசுப்பிரமணியம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 669)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udpn8fat/
தமிழ்“சூல் பை அகற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/udpn8fat/APA
Oliyon Research. (2026). சூல் பை அகற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udpn8fat/MLA
"சூல் பை அகற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/udpn8fat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment