சாலையின் ஒவ்வொரு பகுதியையும் அளவிட்டு அமைத்தல், சாலை அமைவு வடிவமைத்தல் எனப்படும். சாலையை ஒழுங்குபடுத்துதல், சரிவு, அகலம், வளைவு, பார்வைத் தொலைவு அமைத்தல் ஆகியவையும் சாலை அமைவு வடிவமைத்தலில் (geometrical design of roads) அடங்கும். இதனால், போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, வசதி, சிக்கனம் ஆகியவை மேம்படும். அமைவு வடிவமைத்தல், குறைந்த செலவு, நெடுஞ்சாலை வகை, நில அமைப்பு, வேகத் தேவை, சாலையின் கொள்ளளவு, ஊர்திகளின் வடிவமைப்பு, பார்வைத் தொலைவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு சாலை அமைக்க வேண்டும். <!---- முன் பக்கத் தொடர்ச்சி இவ்வரிகள் இங்கு அமைந்தால்தான் ஒழுங்குற அமையும். இந்த வரிகள் பக்க நடுவில் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. எனவே, முறையான பொருள் பெற, இவவரிகளை மாற்ற வேண்டாம். ----> <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> பார்வைத் தொலைவு, <!---- பக்கக் கடைசியில் தோன்றும் இவ்வார்த்தைகள் இங்கு அமைந்தால்தான் ஒழுங்குற அமையும். இவ்வார்த்தைகள் பக்கக் கடைசியில் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. எனவே, முறையான பொருள் பெற, இவ்வார்த்தைகளை மாற்ற வேண்டாம். ---->சாலையின் எல்லா இடங்களிலும், வளைவுகளிலும், மேடு பள்ளங்களிலும், சாலைச் சந்திப்புகளிலும் இருக்க வேண்டும், நிறுத்துவதற்குத் தேவையானது, முன்னால் செல்லும் ஊர்தியைக் கடந்து செல்லத் தேவையானது, இரவு நேரங்களில் விளக்கு ஒளியில் நிறுத்துவதற்குத் தேவையானது எனப் பார்வைத் தொலைவு பலவகைப்படும். நிறுத்துவதற்குத் தேவையான பார்வைத் தொலைவைக் காண, எதிர் வினைத் தொலைவையும், ஊர்தியை நிறுத்திய பிறகு அது நகரும் தொலைவையும் கூட்ட வேண்டும். இவற்றைக் கணக்கிட, ஊர்தி வடிவமைப்பு வேகம், எதிர் வினை நேரம், உராய்வுக் குணகம், ஊர்திப் பளு முதலியவை தேவைப்படும். முன்னால் செல்லும் ஊர்தியைக் கடந்து செல்லத் தேவையான தொலைவைக் கணக்கிட, ஊர்தி வடிவமைப்பு வேகம், ஊர்தி கடக்க வேண்டிய தொலைவு, இரு ஊர்திகளின் வேக வேறுபாடு, கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம், ஊர்தியைக் கடக்கு முன்பும், கடந்த பின்பும் உள்ள ஊர்தி வேகம் ஆகியவற்றை அறிய வேண்டும். சாலைச் சந்திப்புகளைத் திட்டமிடும் போது, மூலைகளில், பார்வைத் தொலைவு தேவையான அளவு அமைய வேண்டும். ஓட்டுநர் பார்வைக்கு, சந்திப்பின் பரப்பளவு முழுதும் தெரியுமாறு அமைய வேண்டும். பார்வைத் தொலைவிற்குள்ளாக ஊர்தி வேகத்தை மாற்றவும், நிறுத்தவும் நேரம் கிடைக்குமாறு வசதி வேண்டும். கட்டுமானம், இயக்குதல், பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவை ஒரு கிலோ மீட்டருக்கு ஓர் ஆண்டிற்கு எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும். மிகுந்த சரிவு, மலைப் பகுதி, குறைந்த சரிவு, சரிவு இல்லாதது என நில அமைப்பு, பல வகையாகப் பிரிக்கப்படும். ஊர்தி வேகம் பயணம் முழுதும் ஒரே வேகத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு சாலை அமைவு வடிவமைக்கப்பட வேண்டும். சாலையின் புறப்பரப்பு, போக்குவரத்து அளவு, வளைவு, பார்வைத் தொலைவு ஆகியவற்றைப் பொறுத்தும் ஊர்தி வேகம் அமையும். சாலையின் கொள்ளளவு என்பது ஒரு மணி நேரத்தில் அச்சாலையில் செல்லக் கூடிய ஊர்திகளின் மிகு எண்ணிக்கை ஆகும். அது ஊர்தி, ஊர்தி வேகம், இடையூறு, ஊர்தி ஓட்டுநர் வசதி ஆகிய காரணங்களால் மாறுபடக் கூடும். ஊர்தி வடிவமைப்பு, அதன் சுமை, சக்கரங்களின் அமைப்பு, மொத்த நீளம், அகலம், உயரம், சுழற்சி, ஆரம் ஆகியவை ஊர்தி வேகத்தையும், அமைவு வடிவமைப்பையும் கட்டுப்படுத்தக் கூடியவை. பார்வைத் தொலைவு என்பது ஓட்டுநரால் பார்க்க முடிகின்ற சாலை நீளம் ஆகும். இது சாலைப் பாதுகாப்பிற்கும், வசதியான இயக்கத்திற்கும் இன்றியமையாதது. <!---- ‘பார்வைத் தொலைவு’ முதல் பத்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.----> சாலையின் கிடைத்தள ஒழுங்கமைப்பு வடிவமைக்கப்படும் போது, சாலைகளின் வளைவுகள், ஓரச் சாலை உயர்வு, வளைவுகளில் தேவைப்படும் அதிகமான அகலம், மலைச்சாலைகளில் தேவைப்படும் அதிகமான அகலம், தடுப்புகள் உள்ள இடங்களில் பார்வைத் தொலைவு ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். சாலைகளின் வளைவுகள் சாதாரண வளைவு, இணைந்த வளைவு, எதிர்த் திசை வளைவு, விலகிச் செல்லும் வளைவு, சீராக மாறிச் செல்லும் தொடர்ந்த வளைவு எனப் பல வகைப்படும். வளைவுகள் அமைக்கும் போது, ஆரத்தின் சரியான அளவு, வளைவுகளின் கோணங்கள் முதலியவற்றைக் கண்டு பிடித்துப் பயன்படுத்த வேண்டும். சாலையின் செங்குத்துத் தள ஒழுங்கமைப்பு வடிவமைக்கப்படும் போது, நீள் திசையில் சரிவு, மேடு பள்ளங்கள், உயர்ந்து தாழ்ந்து செல்லும் வளைவுகள் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். இவ்வாறு வளைவுகள் அமைக்கும் போது, பார்வைத் தொலைவு வளைவுகளின் நீளம், ஊர்தி விளக்கு ஒளித் தொலைவு, ஓட்டுநர் வசதி, கழிவு நீர் செல்லும் வசதி முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விளக்கு ஒளித் தொலைவை ஊர்தி நிறுத்துவதற்குத் தேவையான பார்வைத் தொலைவாக அமைக்க வேண்டும். பள்ளத்தில் வளைவு அமைக்கும் போதும், மிகத் தாழ்வான சாலைப் பரப்பு அமைக்கும் இடத்தை முடிவு செய்யும் போதும் கழிவு நீர் செல்ல வசதியாகவும், கழிவு நீர்க் குழாய்கள் சாலைக்குக் கீழே வசதியாகவும் அமைய, தட்டை நிலப் பரப்பு வகையைத் திட்டமிட வேண்டும். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு ஆகியன இணைந்து அமையும் போது, ஒழுங்கமைப்பு மிகவும் இன்றியமையாதது. சாலையின் மொத்த அகலத்திற்கும், ஓட்டுநரின் நம்பிக்கைக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்ற வகையில், சிறந்த முறையில் சாலையின் புறப் பரப்பு அமைய வேண்டும். சாலை உட்புறமாக வளைந்த மேற்பரப்புக் கொண்டிருந்தால், ஒழுங்கமைப்புச் சீராக அமைவதில்லை. மேலும், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மிகு நீளமான சாலையின் இடையே மறைந்துள்ள குழிவான சாலைப் பகுதி தீமை செய்யும். சாலை அமைவு வடிவமைப்பு வகைகள். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு ஆகியவற்றின் தொடக்கப் புள்ளிகள் ஏறத்தாழ இணைந்த ஒரே புள்ளியாக இருத்தல் வேண்டும். கிடைத்தள வளைவு, செங்குத்துத் தள வளைவு இரண்டின் நீளமும் ஏறத்தாழ ஒரே நீளம் இருக்க வேண்டும். இரு வளைவுகளுக்கும் ஒரே நீளம் அமைக்க முடியாத போது, கிடைத்தள வளைவு நீளத்தை மிகுதியாக அமைத்தல் வேண்டும். செங்குத்துத் தள வளைவின் உச்சியில் கிடைத்தள வளைவு அமையாமலும், திடீர்த் திருப்பம் உண்டாக்கும் கிடைத்தள வளைவு இல்லாமலும் இருக்க வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> வடிவமைப்பின் போது, சாலைத் தளத்தின் பல பகுதிகளும் சரிவர அமையக் கவனம் செலுத்த வேண்டும். சாலையின் அகலம், எதிர்கால விரிவாக்கத்திற்கும் சேர்த்து முதலிலேயே முடிவு செய்யப் பட வேண்டும். நெடுஞ்சாலையின் உரிய பாதை எனப்படுவது எல்லைகளுக்கு இடையேயுள்ள சாலைத் தளம் ஆகும். நில அகலம் எனப்படுவது, சாலையின் இரு புறமும் உள்ள மண் பகுதிகளும், தடுப்புச் சுவர்ப் பகுதிகளும், மரங்கள் இருக்கும் நிலங்களும் சேர்ந்த பகுதியாகும். சில இடங்களில் ஊர்திகள் நிறுத்துமிடம், சாலைப் பொருள்கள் சேமிக்கும் இடம், எந்திரங்கள் நிறுத்துமிடம் இவற்றிற்காகச் சாலையின் அகலம் மிகுதியாக இருக்க வேண்டும். சாதாரணமாக நில அகலம் 18—45 மீ வரை இருக்கும். தவிர்க்க முடியாத நகரங்களுக்குள் உள்ள சாலைகளில் மிகக் குறைவாகவும் இருக்கலாம். ஊர்தி செல்லும் பாதை அல்லது தள அகலம் போக்குவரத்து வரிசைகளைப் பொறுத்து அமையும். ஒரு வரிசை அகலம் 3.75 மீ., இரு வரிசை அகலம் 7 மீ. என அமைக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் இரு வரிசை அகலம் 5.5 மீட்டருக்கும் குறையக் கூடாது. பாலங்களின் மீது அமைக்கும் போது, ஒரு வரிசை அகலம் 4.25 மீ; இரு வரிசை அகலம் 7.5 மீ. என அமைய வேண்டும். சாலைகளின் இருபுறமும் அமைந்துள்ள மண் மேட்டுப் பகுதி கரை எனப்படும். அதன் சிறும அளவு அகலம் 1.85 மீ சாலைகளின் அருகில் அமைக்கப்படும் நடைபாதை அகலம் 1.50 மீ; ஒரு வழி மிதி வண்டிப் பாதை அகலம் 2 மீ; இரு வழி மிதி வண்டிப் பாதை அகலம் 3 மீ என இருக்க வேண்டும். ஒரு செங்கல் அகலக் கோட்டுச் சுவர், சாலையின் ஓரங்களில் அகலம் மிகுதியாக இருக்கும் இடங்களில் அமைய வேண்டும். பெரிய சாலைச் சந்திப்புகளின் நடுவில் 5 மீ. அகலம் வரை இடங்களை வட்ட வடிவில் விட்டு வைக்க வேண்டும். தேவையான இடங்களில் அகலம் குறைவான நீண்ட புல்வெளிகள் அமைக்க வேண்டும். சாலை ஓரங்களில் பாதுகாப்பிற்கெனத் தடுப்புக் கல் தூண்கள், வேலிகள் முதலியவற்றைச் சில இடங்களில் அமைக்க வேண்டியிருக்கும். சாலை ஓரங்களில் விளக்குத் தூண்கள், தொலை பேசித் தொடர்பு எந்திரப் பெட்டி, தகவல் பலகை, கல், அடையாளப் பலகை, மரம் முதலியவற்றை ஆபத்து ஏற்படுத்தாத வகையில் அமைக்க வேண்டும். சாலை ஓரங்களில்,விளக்குப் பாதை வரிசைகள் ஊர்திகளை நிறுத்துவதற்கு வசதியாக 3 மீ. அகலமும் 90 மீ. நீளமும் இருக்குமாறு ஒவ்வொரு 1.5 கி.மீ. தொலைவிலும் அமைத்தல் நலம். அவை சாலை வளைவுகளுக்கு அருகிலும், பாலங்களுக்கு அருகிலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலையின் குறுக்குத் திசையில் உள்ள சரிவை, சாலை வகையைப் பொறுத்தும், மழை நீர் அளவைப் பொறுத்தும் அமைக்க வேண்டும். இச்சரிவு மண் சாலையில் 3—4%உம், கற்சாலைகளில் 2.5—3% உம், தார்ச் சாலையில் 2.5%உம், கற்காரைச் சாலையில் 2% உம் இருக்குமாறு அமைக்க வேண்டும். இக்குறுக்குச் சரிவு, சாலையில் நீள்திசைச் சரிவில் பாதி அளவு இருக்குமாறு அமைந்தால், மழைvநீர் அங்கு தங்காமல், சாலைகளின் இருபுறமும் வடிந்து விடும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலையின் புறப்பரப்புத் தன்மை, குறுக்கு வெட்டுத் தளம், ஒழுங்கமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள், பல வகையிலும் கேடு தருகின்றன. இதனால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது; பயண நேரம் கூடுகிறது; விபத்துகள் அதிகரிக்கின்றன; பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் பின் வருவன: சமச்சீரற்ற சாலைத் தளம். குறிப்பிட்ட தொலைவிற்குள் உள்ள மேடு பள்ளங்கள், கரடுமுரடான குணகத்தால் குறிப்பிடப்படும். இக்குணக மதிப்பு 150 செ.மீ./கி.மீ. க்குள் இருக்க வேண்டும். இக்கரடு முரடான தன்மையை, அதற்கென உள்ள அளவியால் அளக்க முடியும். சமச்சீரற்ற சாலையால் ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டால், அச்செலவில் நல்ல கற்காரைத் தளச் சாலையே அமைக்க முடியும். சாலையின் வழுக்கும் தன்மை. இது சாலையின் புறப் பரப்பு, அது கட்டப்பட்ட பொருள்களின் பண்பு, சாலையின் வகை, மழை நீர் நிற்கும் அளவு, சேறு அல்லது உலர்ந்த மணல் இருக்கும் அளவு, சக்கரங்களின் நிலை, ஊர்திகளின் வேகம், நிற்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். இவ்வழுக்கும் தன்மையால், சாலையின் நீள் திசையில் வழுக்குவதை விட, சாலையின் ஓரத் திசையில் வழுக்குவது மிகுந்த கேடு விளைவிக்கக் கூடியது. இதற்கு உராய்வு அதிகம் ஏற்படுத்தும் வளைவுகள் அமைக்க வேண்டும். கிடைத்தள வளைவில் உராய்வுக் குணகம் 0.15 என்றும், நீள்திசை வளைவில் உராய்வுக் குணகம் 0.4 என்றும் இருக்க வேண்டும். தார்ச்சாலைகள் இரவு நேரங்களில் தெளிவாகக் காட்சியளிப்பதில்லை. குறிப்பாக, மழைக் காலங்களில் மிக மோசமாக இருக்கும். கற்காரைத் தளச் சாலை தெளிவாகக் காட்சியளிக்கும். ஆனால், அது கண் கூசுமாறு ஒளிச் சிதறல் ஏற்படுத்தும். மழைக் காலங்களில் நீர் உள்ள சாலை ஒளிச் சிதறலை மிகுதியும் உருவாக்கும். இதனால் ஊர்தி வேகம் குறையும். விபத்து நேரும் வாய்ப்பும் மிகும். சாலைக்கரைகளின் நிறைவில்லா நிலை. பெரும்பாலான சாலைகளில் சாலைக் கரைகள் சாலைத் தளத்தை விடத் தாழ்ந்து அமைந்துள்ளன. இது சமச் சீரற்ற நிலையை உருவாக்கி, ஊர்திகளுக்கு உறுதியற்ற நிலையை ஏற்படுத்துகிறது; மழைக் காலங்களில் எளிதில் சாய்ந்து வழுக்கும் நிலையை உருவாக்கி விடும். ஊர்திகள் எதிர்த் திசையில் கடக்கும் போதும், ஒரே திசையில் முன்னால் செல்லும் ஊர்தியைக் கடக்கும் போதும், தொல்லை ஏற்படுத்தித் தாமதம் உண்டாக்கும்; விபத்து நேரும் சிற்றூர்ச் சாலைகளில் மேடு பள்ளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும், இறுக்கமடையாத மணல் பகுதிகளும், மழைக் காலங்களில் சேறு நிறைந்த பகுதிகளும் காணப்படுகின்றன. மக்கள் அப்பகுதியில் நடந்து கூடச் செல்ல முடிவதில்லை. இவை போன்ற இடையூறுகளால், சாலையின் மொத்த அகலம் குறைக்கப்படுகிறது. மேலும், சிற்றூர்ப் பகுதிகளில், சாலைகளின் ஓரங்களும், கூரைப் பகுதிகளும், மாட்டு வண்டிகளாலும், கை வண்டிகளா- லும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. சரியான முறையில் வடிவமைக்கப்படாத, பராமரிப்பு இல்லாத குழிவான சாலைகளும், பள்ளங்களும் விபத்துகளை அதிகரிக்கின்றன. —ஏ. எஸ். எஸ். சேகர் நூலோதி. Kenneth B. Woods, Highway Engineering Hand Book, First Edition, McGraw-Hill Book Company, New York, 1960.