இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ
irācēntiram piḷḷai, pā.a.a
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; சென்னையில் வாழ்ந்தவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; சென்னையில் வாழ்ந்தவர். கிறித்தவ சமயத்தைச் சார்ந்த இவர் சமய, தமிழ்த் தொண்டுகள் பல புரிந்துள்ளார். இவர் தந்தையார் பெயர் அப்பாவு. அவரும் தமிழ்ப்புலமை மிக்குச் செய்யுள் இயற்றுவதில் வல்லவராக விளங்கினார். அதனால் அவர் ‘அமிர்தகவி’ என்னும் பட்டம் பெற்றுத் திகழ்ந்தார். இராசேந்திரம்பிள்ளை ‘ஆதாம் ஏவாள் விலாசம்’ என்னுமொரு நூலியற்றியுள்ளார். அதன்கண் தம் தந்தையைக் குருவாகவும் தந்தையாகவும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.
இவர் மகாவிகட தூதன் என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இப்பத்திரிகையில் வெளியான கதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகள் கி.பி. 1897 முதல் 1899 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளிவந்துள்ளன. பூலோக விநோதக் கதைகள் என்னும் பெயரில் அமைந்த ஒவ்வொரு தொகுதியும் 101 கதைகளைக் கொண்டதாகும். முதலாம் தொகுதியில் அமைந்த கதைகள் ஆண் பெண் பருவ மாறுதலுக்கேற்ப அவர்களிடம் தோன்றும் குணவேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கதையின் உட்பொருளை உணர்த்தும் ஒரு செய்யுள் அக்கதையின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் தொகுதியில் உள்ள கதைகள் அறங்கூறும் இயல்பின. நான்காம் தொகுதியில் இடம் பெற்றன உலகியல் நிகழ்ச்சிபற்றி அமைந்தனவாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 53)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uazpksv9/
தமிழ்“இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uazpksv9/APA
Oliyon Research. (2026). இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uazpksv9/MLA
"இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uazpksv9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment