இரீவிசு சிம்
irīvicu cim
இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய அமெரிக்க மெல்லிசைக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார்.
இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய அமெரிக்க மெல்லிசைக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இரீவிசின் (Jim Reeves) ஆழமான இனிய குரல் வன்மையால் இவருக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய பாடல்கள் மனித உள்ளத்தின் மென்மையான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பவில்லை. இவர் சமயப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். இவற்றுள் கிறித்துமசு பண்டிகைக் காலத்தில் பாடப்படும் ‘கிறித்துமசு இசைக்கொத்து’ (Christmas Carols) என்ற பாடல் தொகுதி இனிமையானது. இவற்றைத்தவிர, போருக்குச் செல்லும் ஓர் இளைஞனின் உள்ளக்குமுறலையும், அவன் தன் காதலியிடம் கூறும் கடமையுணர்ச்சி நிறைந்த சொற்களையும், ‘தொலைவில் கேட்கும் முரசொலி’ (Distant Drums) என்னும் பாடலில் கேட்கலாம். காதலியை நினைத்து ஏங்கும் காதலனின் ஏக்கத்தைப் பல பாடல்களில் காட்டியுள்ளார். இவற்றை ‘உரோசாமலர் நிரம்பிய அறை’ (Room Full of Roses) என்னும் பாடல் தொகுதியில் கேட்கலாம். நூற்றுக்கணக்கான பாடல்களினால் மக்களின் உள்ளம் கவர்ந்த இரீவிசு, தம் 46–ஆம் வயதில் 1966–ஆம் ஆண்டு புற்றுநோயினால் இறந்தார். மெல்லிசை உலகில் புகழ்பெற்ற இவர் தம் பாடல்கள் இன்று உலகெங்கிலுமுள்ள மக்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 175)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9s66zkk/
தமிழ்“இரீவிசு சிம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u9s66zkk/APA
Oliyon Research. (2026). இரீவிசு சிம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9s66zkk/MLA
"இரீவிசு சிம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u9s66zkk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment