ஆப்டே, ஹரி நாராயண்
āpṭē, hari nārāyaṇ
ஆப்டே, ஹரி நாராயண் (1864-1919) இக்காலத்து மராத்தி நாவலின் தந்தை எனப்பெறுவர்.
ஆப்டே, ஹரி நாராயண் (1864-1919) இக்காலத்து மராத்தி நாவலின் தந்தை எனப்பெறுவர். பெரும்பாலும் புனாவில் வாழ்ந்து வந்தார். 15 நாவல்கள் எழுதியுளர். சில வரலாறு பற்றியவை. சமூக நாவல்களே சிறந்தவை. சீர்திருத்த நோக்கத்துடன் எழுதப்பெற்றவை. 'கரமனுகம்' என்னும் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்திப் பாமர மக்களுக்குங்கூட இலக்கியச்சுவை ஏற்படுமாறு செய்தார். பல சிறு கதைகளும் நாடகங்களும் எழுதியும் மொழி பெயர்த்துமுளர். சிறந்த திறனாய்வாளர். முதிர்ந்த வயதில் அரசியல் இயக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஆர். எஸ். ஜோ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 426)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7ddje6x/
தமிழ்“ஆப்டே, ஹரி நாராயண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7ddje6x/APA
Oliyon Research. (2026). ஆப்டே, ஹரி நாராயண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u7ddje6x/MLA
"ஆப்டே, ஹரி நாராயண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7ddje6x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment