கணக்கிடும் தகவல் அமைப்பு
kaṇakkiṭum takaval amaippu
பொருள்கள் · Senses
1.
ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய தரவுகள் அடங்கியபட்டியல். accounting machine : கணக்கியல் எந்திரம்; கணக்கு வைப்பு எந்திரம் : 1. 1910 மற்றும் 50களில் வணிகக் கணக்கியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்திரம். தானியங்கு தரவு செயலாக்கத்திற்குப்பயன்படுத்தப்பட்ட பழமையான கருவிகளுள் ஒன்று. தொடக்ககால கணக்கியல் எந்திரங்கள் மின்னணு அடிப்படையிலானவை அல்ல. துளை அட்டை மற்றும் செருகு பலகைச்சட்டங்களைப் பயன்படுத்தின. 2. கணக்கியல் செயல்பாடுகளுக்கு என்றே தனிச்சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி. இக்கணினியை இயக்கியதும் அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள கணக்கியல் மென்பொருள் இயங்கத்தொடங்கும். accounting systems : கண்க்கிடும் அமைப்புகள் : நிதி சார்ந்த தரவுகளை அளவிட, விளக்க, ஆராய மற்றும் பரப்ப முடிவெடுப்பவர்களை அனுமதிக்கும் கணினி அமைப்புகள். account number : கணக்கு எண் : ஒரு கணினி மையத்தில் கணினி பயன்படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக்காகப் பயன்படும். நுழை சொற்களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது நுழைச் சொற்களுடன் கனககு எண்ணும் தரப்படலாம். account policy : கணக்கியல் கொள்கை : கணக்குவைப்புக் கோட்பாடு : 1. குறும்பரப்புப் பிணையங்கள் மற்றும் பல்பயனாளர் பணித்தளங்களில் பயனாளர்களின் உரிமைகள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய வரையறைகள். ஒரு புதிய பயனாளர், முறைமையை அணுக அனுமதிக்கலாமா, ஏற்கெனவே உள்ள பயனாளருக்குக் கூடுதலான வளங்களைக் கையாளும் உரிமைகளையும் வழங்கலாமா என்பது போன்ற கொள்கை நிலைகளை வரையறுப்பது. ஒரு பயனாளர் தனக்குரிய சலுகைகளை முறைப்படி பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விதிமுறைகளையும் இக்கொள்கை வரையறை செய்கிறது. 2. விண்டோஸ் என்டி (விண்டோஸ் 2000) மற்றும் விண்டோஸ் எக்ஸ் பீ இயக்க பிணையத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது ஒரு களப்பிரிவில் (domain) உள்ள பயனாளர்கள் நுழைசொற்களைப் (passwords) பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை இச்சொற்றொடர் குறிக்கிறது. accumulator : குவிப்பி; திரளகம்; திரட்டகம்; சேர்ப்பகம் : நுண்செயலில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம். பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர் கூட்டுத்தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது. ACD : ஏசிடி : Automatic Call Distributor என்பதன் சுருக்கம். வரிசைமுறை அமைப்பில் பயன்படுவது. ACH : ஏசிஎச் : Association for Computers and the Humanities என்பதன் குறும்பெயர். மொழி, இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூகவியல் இவற்றில் கணினி ஆய்வுகளையும் மற்றும் கலை, இசை, நடனம் ஆகியவற்றைப் படைக்கவும் கற்கவும் பயன்படுத்துபவரை ஊக்குவிக்கும் பன்னாட்டுச்சங்கம். ACI : ஏசிஐ : Automatic Car identification என்பதன் குறும்பெயர். தானியங்கு முறையில் தொடர்வண்டி பெட்டிகளை அறிதலைக் குறிக்கும். இரயில் பாதை நிறுவனங்கள் தொடர்வண்டி பெட்டிகளை அறிவதற்குப்பயன்படுத்தும் தானியங்கு முறை. ACIA : ஏசிஐஏ : Asynchronous Communications interface Adapter என்பதன் குறும்பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடைமுகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு. ACIS : அசிஸ் : Andy. Charles. lan's System என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது பொருள் நோக்கிலான வரைவியல் மாதிரி கருவிகளை உருவாக்கும் தொகுதியாகும். முப்பரிமாணப் பயன்பாடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட வரைவியல் எந்திரம் (geometry engine).
— accounting information system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3qtawyq/
தமிழ்“கணக்கிடும் தகவல் அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3qtawyq/APA
Oliyon Research. (2026). கணக்கிடும் தகவல் அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3qtawyq/MLA
"கணக்கிடும் தகவல் அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3qtawyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment