எந்திரவியல் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு நேர் மின் எந்திரம், நேர் மின்னாக்கி (d.c. generator) ஆகும். சுழலிச் சுருளையின் மின் வழங்கு முனைகளுக்கிடையே சுமை இணைக்கப் பட்டிருக்கும் போது, எந்திரவியல் ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப் பட்டுச் சுமை ௧ரு வழங்கப் படுகிறது. மின்னாற்றலை உற்பத்தி செய்ய ஒரு காந்தப் புலம் காற்று வெளியில் உருவாக்கப் பட வேண்டும். இப்புலம், ஆற்றல் மாற்றத்திற்காக இணைப்பாகப் பயன் படுகிறது. எந்திரத்தில் உருவாகும் மின்சாரத்தாலும், புலச் சுருளையைக் கிளர்வுறச் செய்யலாம். அப்போது, அது தன் கிளர்வு மின்னாக்கி (separate excitation generator) எனப் படும். மின்னழுத்தம் எஞ்சிய காந்தத்தால் முதலில் தூண்டப் படும். அது மின்னழுத்தம் பெறத் தொடங்கியவுடன், புலச் சுருளைகளில் மின்னோட்டம் பாய்ந்து, கூடுதல் காந்தப் பாயத்தை உருவாக்குகிறது. இதனால், கூடுதல் மின்னழுத்தம் உற்பத்தி செய்யப் படுகிறது. நிலையான பாயம் புலச் சுருளை உற்பத்தி செய்யும் வரை இச்செயல்பாடு தொடங்குகிறது. புலச் சுருளையின் தடையைச் சார்ந்து, அதன் மதிப்பு அமையும். ஒரு நேர் மின்னாக்கியின் செயல்பாடு அதன் சமச் சுற்று, செயல்பாட்டுச் சமன்பாடுகள், திறன் வழி வரை படம் ஆகியவற்றால் விளைவிக்கப் படும். பொதுவாக ஓர் இரு முறை (கலப்புமுறை) மின்னாக்கியைப் பயன் படுத்தலாம். புலச் சுருளை, சுழலி சுருளையுடன் பக்கவாட்டில் இணைக்கப் படுகிறது. மேலும், காந்தச் சுற்றில் சில சுற்றுகள் சுழலிச் சுருளையுடன் தொடர் நிலை இணைப்புப் பெறுகின்றன. அதனால், உருவாகும் கூடுதல் பாயம் மின்னூட்டிகளின் மின்னழுத்த வீழ்ச்சி, சுழலிச் சுருளையின் தடை தரும் வீழ்ச்சி ஆகியவற்றின் விளைவுகளை ஈடு செய்யும். செயல்பாட்டுச் சமன்பாடுகள். தூண்டல் மின் இயக்கு விசைE_a = \big( P Z / a \big) \phi n = K e \phi n திருக்கம் T= \big( P Z / 2 \pi a \big) \phi I_a = K T \phi I_a சுமை மின்னழுத்தம் V_t = E_a - I_a \big(R_a + R_s \big) மின்னோட்டம் I_a = I_I + I_f பக்கவாட்டு இணைப்பு மின்னாக்கி. சுமை மின்னோட்டம் அதிகரிக்கும் போது, முனைய மின்னழுத்தம் குறைகிறது. ஏனெனில், சுழலிச் சுருளையின் எதிர் வினையால் துருவப் பாயம் குறைகிறது. சுழலிச் சுருளையில் மின்னழுத்த வீழ்ச்சி \big( I_a R_a \big) ஏற்படுகிறது. சுமை மின்னோட்டம் உயரும் போது, சுருளையின் மின்னோட்டமும் அதிகரிப்பதால், இவ்வீழ்ச்சியும் கூடுகிறது. புல மின்னோட்டம் I_t = V / R_t முனைய மின்னழுத்தத்தை ஒட்டிக் குறைகிறது. இதனால், காந்தப் பாயம் மேலும் குறைய, முனைய அழுத்தமும் மேலும் வீழ்ச்சியடைகிறது. சுமை மின்னோட்டம் மிகுவதால், முனைய மின்னழுத்தம் ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரை வீழ்ச்சியடைகிறது. பின்னர், மேலும் கூடினால், மின்னகச் சுருளையின் எதிர் வினைப்பால், சுமை மின்னோட்டம் குறைகிறது. ஆகவே, சுமை மின்னோட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப் படுத்தப் படுகிறது. தொடர் நிலை மின்னாக்கி. மின்னகச் சுருளையும் சுழலிச் சுருளையும் தொடர் நிலையில் இணைக்கப் படும் போது, அவற்றில் ஒரே அளவு மின்னோட்டமே பாய்கிறது. சுமை மின்னோட்டம் இணைக்கப் படாவிடில், எஞ்சிய காந்தத்தால் மின்னழுத்தம் உருவாக்கப் படுகிறது. எந்திரம் நிலையாக நியம வேகத்தில் ஓட்டப் படுகிறது. பளுத் தடை படிப் படியாகக் குறைக்கப் படச் சுமை மின்னோட்டம் அதிகரிக்கிறது. சுழலிச் சுருளையின் எதிர் வினைப்பால், சுழலி மின்னமுத்தம் சிறப்பியல் அழுத்தத்தை விடக் (ideal voltage) குறைகிறது. சுமை மின்னழுத்தம் மின்னகச் சுருளைச் சுற்றின் அழுத்த வீழ்ச்சியால், மேலும் குறைகிறது. இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கி. பக்கவாட்டு இணைப்புகள் மின்னாக்கியின் மின்னழுத்தம் மின்னோட்டம் அதிகரிக்கத் தொடங்கினால், முனைய மின்னழுத்தம் குறையத் தொடங்கும். இதை ஈடு செய்யப் புலத்திற்குத் தொடர் நிலை இணைப்பில், சுருளை சுற்றப் பட்டு, அது இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கியாக மாற்றப் படுகிறது. அச்சுருளை பக்கவாட்டு இணைப்புச் சுருளைகளின் மேலே தடிக் கம்பிகள் கொண்ட சில சுற்றுகளாக அமைக்கப் படும். அது மின்னகச் சுருளையுடன் தொடர் நிலையில் இணைக்கப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> மின்னாக்கியில் முழுச் சுமை முனைய அழுத்தம், சுமையற்ற மின்னழுத்தத்திற்குச் சமமாக இருந்தால், அது சரியான கலப்பு முறை என்றும் கூறப் படும் தொடர் நிலைப் புலம் பக்கவாட்டுப் புலத்தை எதிர்த்தால், அது வேறுபாட்டுக் கலப்பு முறை எனப் படும். மின்னாக்கி கீழ்க் காணும் நிலைகளில் மின்னாக்கம் செய்யத் தொடங்குவதில்லை. அவை, எஞ்சிய காந்தம் இராமை, எஞ்சிய காந்தம் மின்னாக்கியின் சுழற்சிக்கு எதிர்த் திசையில் மின்னியக்கு விசையை உருவாக்கல், பக்கவாட்டுப் புலச் சுருளையின் தடை மாறு எல்லைத் தடையை விட மிகுதியாக இருத்தல், சுமை இருப்பின், சுமைத் தடை மாறு எல்லைத் தடையை விடக் குறைவாக இருந்தல் என்பன. தன் கிளர்வு நடை பெறக் கீழ்க் காணும் நிலைகள் தேவை. அவை புலச் சுற்றில் எஞ்சிய காந்தம் இருத்தல், புலச் சுற்று, புலப் பாயத்திற்கு வலிவூட்டும் வகையில் இணைக்கப் படல், மின்னாக்கியின் வேகம் மாறு எல்லை வேகத்தை விடக் கூடுதலாக இருத்தல், புலச் சுற்றின் தடை மாறு எல்லைத் தடையை விடக் குறைவாக இருத்தல் என்பன. நேர் மின்னாக்கியின் கட்டமைப்பு நேர் மின்னோடி கட்டமைப்பைப் போன்றதே. இது நிலைப் பகுதியில் சுழலிச் சுருளையும் திரட்டியும் கொண்ட அமைப்பாகும். —எஸ். சுந்தரசீனிவாசன்