இராமதாசர், பத்திராசலம்
irāmatācar, pattirācalam
கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் இசைப்பாடல் இயற்றுவதில் வல்லவராக விளங்கியவர்.
கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் இசைப்பாடல் இயற்றுவதில் வல்லவராக விளங்கியவர். இவரது இயற்பெயர் கோபண்ணா. இவர் இராம பத்தியில் தலைசிறந்து விளங்கினார். இவர் தந்தை இலிங்கண்ணா. இவர் காலத்தில் அரசாண்ட தானேசா என்னும் நவாபு மன்னன் இவரைக் கோல்கொண்டாவின் வட்டாட்சித் தலைவராகப் பணியமர்த்தினான். வைணவ சமயத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இராமதாசர், இராமபிரானுக்குத் திருக்கோயில் கட்டுவதில் அரசாங்கக் கருவூலப் பணத்தினை மிகுதியாகச் செலவிட்டார். உண்மை உணர்ந்த மன்னன் இவரைச் சிறையிலடைத்தான். இராமலக்குவர் மானிடவடிவில் தோன்றி, அரசிற்குச் செலுத்த வேண்டிய தொகையினைச் செலுத்தி இராமதாசரை விடுதலை செய்யுமாறு செய்தனர் என்னும் செய்தி கூறப்படுகிறது. இராமபிரானிடத்தில் அளவற்றபத்தி ஈடுபாடு கொண்ட இவர் அவன்மீது எண்ணற்ற இன்னிசைப் பாடல்களைப் பாடினார். தெலுங்குமொழியில் அமைந்துள்ள அப்பாடல்களைத் தெலுங்கு மக்களேயன்றி மற்றவர்களும் நெஞ்சினிக்கப்பாடி இன்புற்றனர். மக்கள் அனைவரும், இராமபத்தி மிக்குடைய இவரை, இராமதாசர் என்றே போற்றினர். இவருடைய வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய தென்னிந்திய மொழிகளில் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. இவர் ‘பத்திராசல தாசரதி சதகம்’ என்னும் பெயரில் ஒரு சதகம் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியிலுள்ள சதக இலக்கியங்களில். இது ஒரு சிறந்த இலக்கியமாகக் நிகழ்கிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 121)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tu52qpja/
தமிழ்“இராமதாசர், பத்திராசலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tu52qpja/APA
Oliyon Research. (2026). இராமதாசர், பத்திராசலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tu52qpja/MLA
"இராமதாசர், பத்திராசலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tu52qpja/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment