இலூவிசு, ஆசுகார்
ilūvicu, ācukār
தலை சிறந்த அமெரிக்க மானிடவியலாளருள் ஒருவரும் வறுமை நிலைப் பண்பாட்டுக் (Poverty of Culture) கோட்பாட்டை வகுத்தவருமாவார்.
தலை சிறந்த அமெரிக்க மானிடவியலாளருள் ஒருவரும் வறுமை நிலைப் பண்பாட்டுக் (Poverty of Culture) கோட்பாட்டை வகுத்தவருமாவார். ஆசுகார் இலூவிசு (Oscar Lewis) 1936–ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் வரலாற்று முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மைத்துனர் ஆபிரகாம் எச். மாசுலோவின் (Abraham H. Maslow) தூண்டுதலால். உரூத் பெனிடிக்டு (Ruth Benedict) என்னும் மானிடவியல் பேராசிரியையின் மாணாக்கராகி, 1940–ஆம் ஆண்டில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் மானிடவியலில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார்.
கம்பள வணிகத்தின் பங்கைப் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் வெள்ளையர் தொடர்பால் பிளாக்புட் மக்களின் பண்பாட்டில் ஏற்பட்ட தாக்கம், (The Effects of White contact upon Blackfoot culture: With special referene to the role of the Fur Trade) என்னும் தலைப்பில் செய்த இவரது ஆய்வு, அமெரிக்க நாட்டுத் தத்துவக் கழகத்தின் (American Philosophical Society) பரிசினைப் பெற்றது. அமெரிக்க நாட்டு நிதித் துறையில் விளம்பரப் பகுப்பாளராகவும் (Propaganda Analyst) பின்னர், ஏல் (Yale) பல்கலைக் கழகத்துடன் இணைந்து, மனித உறவுப் பகுதிக் கோப்புத் திட்டத்திலும் (Human Relations Area Files) 1942–இல் பணிபுரிந்தார். இவர் 1943–இல் மெக்சிகோ சென்று, நாட்டுப்புற முன்னேற்றத் திட்டத்தில் பணியாற்றிய பின்னர்த் தெப்போசுட்லான் குடியானவர்களைப் (Peasants of Tepoztlan) பற்றி ஆய்வு செய்தார். இலினாய்சுப் (Illinois) பல்கலைக் கழகத்தில், 1948–ஆம் ஆண்டு மானிடவியல் துறையினைத் தொடங்கினார்.
இவர் இந்தியக் கிராம வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து ‘வட இந்தியாவில் கிராம வாழ்க்கை’ (Village Life in Northern India) என்னும் நூலை எழுதினார். இது இந்தியக் கிராம வாழ்க்கையை விவரிக்கும் ஒரு சிறந்த நூலாகும். ஆ.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 433)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqhh9yk5/
தமிழ்“இலூவிசு, ஆசுகார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqhh9yk5/APA
Oliyon Research. (2026). இலூவிசு, ஆசுகார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tqhh9yk5/MLA
"இலூவிசு, ஆசுகார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqhh9yk5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment