சீழ் நீரிழிவு
cīḻ nīriḻivu
சிறுநீர் வெள்ளணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலைக்கு, சீழ் நீரிழிவு என்று பெயர், சிறுநீரில் உள்ள வெள்ளணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் மூலம், ஒருவருக்குச் சீழ் நீரிழிவு உள்ளதா எனத் தீர்மானிக்க முடியும்.
சிறுநீர் வெள்ளணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலைக்கு, சீழ் நீரிழிவு என்று பெயர், சிறுநீரில் உள்ள வெள்ளணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் மூலம், ஒருவருக்குச் சீழ் நீரிழிவு உள்ளதா எனத் தீர்மானிக்க முடியும். இயல்பான மனிதர்களில் ஒரு மணி நேரத்தில் 4,00,000 வெள்ளணுக்கள் சிறுநீரில் வெளியேறுகின்றன. இந்த அளவுக்கு மேல், வெள்ளணுக்கள் வெளியேறினால், இதைச் சீழ் நீரிழிவு எனலாம். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 50 மி.லி. சிறுநீர் சுரக்கிறது. இதன் அடிப்படையில் கணக்கிடும் போது, 1 மி.லி. சிறுநீரில் 8000 வெள்ளணுக்கள் வெளியேறுகின்றன. எனவே சிறுநீரை, நுண்ணோக்கியின் உயர் திறன் புலத்தில் (higher power field) வைத்துப் பார்க்கும் போது, ஐந்து வெள்ளணுக்களுக்கு மேல் காணப் பட்டால், சீழ் நீரிழிவு இருப்பதாகக் கருதப் படும்.
சிறுநீரின் அமில—காரத் தன்மையும், சிறுநீரில் உள்ள வெள்ளணுக்களைப் பாதிக்கக் கூடும். சிறுநீர், அமிலத் தன்மை கொண்டிருக்கும் போது, வெள்ளணுக்கள் உயிருடன் இருப்பதற்கு மிகுந்த வாய்ப்புண்டு. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அழற்சியின் விளைவாகவே சீழ் நீரிழிவு தோன்றுகிறது. சிறுநீரில் பாக்டீரியா நோய்த் தொற்று (urinary tract infection), சிறுநீர்க் கற்கள் (urinary stones), சிறுநீர்ப் பாதையில் சீழ்க் கட்டி என்பன சிறுநீர்ப் பாதையில் அழற்சி ஏற்பட முக்கிய காரணங்களாகும், இவற்றுள், பாக்டீரிய நோய்த் தொற்றே பெரும்பாலும் சீழ் நீரிழிவுக்குக் காரணமாகிறது. —கு. சிவஞானம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 443)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tq7wtvss/
தமிழ்“சீழ் நீரிழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tq7wtvss/APA
Oliyon Research. (2026). சீழ் நீரிழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tq7wtvss/MLA
"சீழ் நீரிழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tq7wtvss/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment