ஆர்னல்டு, மாத்தியூ
ārṉalṭu, māttiyū
(1822 -88) பேர்பெற்ற பிரிட்டிஷ் கல்விப் புலவரான
(1822 -88) பேர்பெற்ற பிரிட்டிஷ் கல்விப் புலவரான
தாமஸ் ஆர்னல்டின் குமாரர். தலை சிறந்த ஆங்கிலக் கவிகளில் ஒருவர். சிறந்த திறனாய்வாளர். நடுத்தரக் கல்விச் சீர்திருத்தம் செய்தவர். இலக்கியத்திற்போலவே சமயத்திலும் அரசியலிலும் பண்பாடும் அழகும் தேவை என்றும் அதற்காகப் பழம் பேரிலக்கியங்களைக் கற்க வேண்டியது அவசியம் என்றும் வற்புறுத்தினார். ஆங்கிலப் பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டில் ஓர் அமிசமே என்று கருதினார். அவருடைய உரைநடை நூல்களுள் சிறந்தவற்றில் சில திறனாய்வுக் கட்டுரைகள் (Essays in Criticism), பண்பாடும் அராஜகமும் (Culture and Anarchy), இலக்கியமும் கொள்கையும் (Literature and Dogma). கவிதைகளுள் சிறந்தவற்றில் சில ஷோரப்-ரூஸ்தும், டிரிஸ்டிரம்த் இசால்ட் என்பனவாம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 460)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpg463v6/
தமிழ்“ஆர்னல்டு, மாத்தியூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpg463v6/APA
Oliyon Research. (2026). ஆர்னல்டு, மாத்தியூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tpg463v6/MLA
"ஆர்னல்டு, மாத்தியூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpg463v6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment