நைட்ரஜன் வெளியேற்றம்
naiṭrajaṉ veḷiyēṟṟam
விலங்கினங்கள் தங்களுக்குத் தேவைப் படும் மிகையான கலோரி ஆற்றலுக்காக, நைட்ரஜன் கொண்ட உணவுப் பொருள்களை மிகுதியாக உட்கொள்கின்றன.
விலங்கினங்கள் தங்களுக்குத் தேவைப் படும் மிகையான கலோரி ஆற்றலுக்காக, நைட்ரஜன் கொண்ட உணவுப் பொருள்களை மிகுதியாக உட்கொள்கின்றன. இவற்றுள் பெரும் பகுதி, அமினோ அமிலங்களாகத் தேவைக்கும் மிகுதியாக உள்ளேற்கப்படும். எனவே, உட்கவர்ந்தது போக, எஞ்சிய மிகையான நைட்ரஜனை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. வினை (1) இல் குறிப்பிடப் பட்டுள்ளவாறு, டிரான்ஸ் அமினேஸ்கள் எனப் படும் வரிசையான நொதிகளால் ஏறத் தாழ அனைத்து வளர் சிதை மாற்றமடைந்த நைட்ரஜன் குளுட்டாமிக் அமிலம் உண்டாக α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமாக மாறுகிறது.
குளுட்டாமிக் டிஹைட்ரோஜினேஸ் நொதியால் குளுட்டாமிக் அமிலம் டைபாஸ்ஃபோபிரிடின் நியூக்ளியோடைடு (DPN) எனும் சக நொதி உடனிருக்க, ஆக்சிஜனேற்றம் அடைந்து மீண்டும் α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமும், அம்மோனியாவும் வினை (2) இல் காட்டப் பட்டுள்ளவாறு உண்டாகின்றன. நீர் வாழும் குளூட்டாமிக் அமிலம் + DPN ==> α–கீட்டோ குளுட்டாரிக் அமிலம் + DPNH+NH*₃ — ------(2)
விலங்குகள் பெரும்பாலும் அம்மோனியாவை அவற்றின் செவுள்கள் அல்லது உடல் பரப்பின் வேறு வழியாக முழுவதுமாக வெளியேற்றி விடுகின்றன. பிற விலங்கினங்கள், குறிப்பாக, நீர்–நில வாழ்விகள் (amphibians), பாலூட்டிகள் ஆகியன முதலில் அம்மோனியாவை யூரியாவாக மாற்றி வெளியேற்றுகின்றன. இம்மாற்றத்திற்கு, ஏறத் தாழ அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக அமைந்த ஆர்னித்தினிலிருந்து ஆர்ஜினின் எனும் அமினோ அமிலம் வளர் சிதை மாற்றமடையும் வினை வழிகள் பயன் படுத்திக் கொள்ளப் படுகின்றன. —த. தெய்வீகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 267)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tj9up7yg/
தமிழ்“நைட்ரஜன் வெளியேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tj9up7yg/APA
Oliyon Research. (2026). நைட்ரஜன் வெளியேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tj9up7yg/MLA
"நைட்ரஜன் வெளியேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tj9up7yg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment