அய்பா
aypā
இசுரேல் நாட்டிலுள்ள துறைமுக நகரம்; செய்பொருள் உற்பத்திகளின் தலைசிறந்த மையமும் பண்பாட்டு மையமுமாகும்.
இசுரேல் நாட்டிலுள்ள துறைமுக நகரம்; செய்பொருள் உற்பத்திகளின் தலைசிறந்த மையமும் பண்பாட்டு மையமுமாகும். வட இசுரேலில் உள்ள கார்மெல் மவுண்டு என்னும் இடத்தையும் அதைச் சுற்றிலுமுள்ள இடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அய்பா (Haifa) நகரம். மத்திய தரைக்கடலின் கிழக்குக் கோடியில் அய்பா விரிகுடாவின் எல்லையில் இந்நகரம் அமைந்துள்ளது.
அய்பாவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பிரிவு தாழ்நிலப் பகுதியாகும். கார்மெல் மவுண்டைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பிரிவு, துறைமுக வசதிகளும் சேமிப்புக் கிடங்குகளும் குடியிருக்கும் வீடுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமான சேரிகளும் கொண்டு விளங்குகிறது. இரண்டாவது பிரிவான மலைச்சரிவுகளில் அய்பா நகரின் சிறந்த வாணிகத் தலங்கள் அமைந்து உள்ளன. மூன்றாம் பிரிவான மேல் மட்டப் பிரிவில் பெரும் வீடுகளும், தங்கும் கட்டடங்களும், தோட்டங்களும், பூங்காக்களும் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
அய்பாவில் பல சமயத் தொடர்பான சின்னங்களைக் காணலாம். பகாய்க் கோயில், கார்மெல் மவுண்டின், காவல் தெய்வமான அன்னையின் மடாலயம், எலிசாவின் குகை போன்றவை அச்சின்னங்களுள் சில. விவிலிய நூலில் தீர்க்கதரிசியாகச் சித்திரிக்கப்படும் எலிசா, தம் பகைவர்களிடமிருந்து தப்ப இங்குள்ள குகையில்தான் ஒளித்துகொண்டார் என்னும் செய்தி சொல்லப்படுகிறது.
அய்பாவில் இரு பல்கலைக் கழகங்கள் உள்ளன. எண்ணெய் சுத்திகரிப்புத் தொழில், சிமெண்டு உற்பத்தித் தொழில் பல்வகை இரசாயனத் தொழில்கள், மின்நுட்பக் கருவிகள் கண்ணாடி எஃகு துணிமணி உற்பத்தி போன்தவை இந்நகரின் சிறப்பான செய்பொருள்களாகும். அய்பாவிற்குக் அய்பாவிற்குக் கப்பற் போக்குவரத்தும் இருப்புப் பாதைப் போக்குவரத்தும் இருப்பதால் இது ஒரு போக்குவரத்து மையமாகும்.
கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள். அய்பா கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சிறுநகரமாகவே இருந்தது. அப்போதுதான் இது முதன்முறையாகத் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது.
அய்பா நகரின் மக்கள் தொகை 2,30,000 (1981); மாவட்டத்தின் மக்கள் தொகை 5,57,400 ஆகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 546)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tf8vnesq/
தமிழ்“அய்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tf8vnesq/APA
Oliyon Research. (2026). அய்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tf8vnesq/MLA
"அய்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tf8vnesq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment