இராப்சன், ஈ.ஜே
irāpcaṉ, ī.jē
என்பார் இந்திய வரலாற்றில் ஆர்வங்காட்டிய வரலாற்றாசிரியர்.
என்பார் இந்திய வரலாற்றில் ஆர்வங்காட்டிய வரலாற்றாசிரியர். இவர் இந்திய இயலில் இளமையிலேயே மிகுந்த பற்றுக்கொண்டவர். பிரிட்டிசு அருங்காட்சியகக் காசியல் (Numismatics) துறையில் உதவியாளராக இராப்சன் (Rapson) சேர்ந்தார். இவர் கரோசுட்டி (Kharoshti) எழுத்தில் தலைசிறந்த வல்லுநர். கேம்பிரிட்சு (Cambridge) பல்கலைக்கழகத்தில் 1906–ஆம் ஆண்டில் இவர் வடமொழிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். கேம்பிரிட்சு இந்திய வரலாறு (Cambridge History of India) என்னும் நூல் தொகுதிகளுள் முதல் இரண்டு தொகுதிகளின் பதிப்பாசியராக இருந்த ஆரெல் இசுடெயின் (Aurel Stein) என்பாருடன் இணைந்து இராப்சன், கரோசுட்டிக் கல்வெட்டுத் தொகுப்பு நூலின் இணை ஆசிரியரானார். காசு இயல் கலையில் இவர் ஆற்றிய பணி சீரும் சிறப்புமுடையதாகும். “பண்டைய இந்தியா” என்னும் நூலை இவர் 1914–ஆம் ஆண்டில் எழுதினார். இந்நூல் மிகப் பெரும் நூலாகக் கருதப்படமாட்டாதாயினும், படிப்பதற்குகந்ததாயும் அதில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் நம்பும்படியாகவும் உள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 88)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tc4b6hz6/
தமிழ்“இராப்சன், ஈ.ஜே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tc4b6hz6/APA
Oliyon Research. (2026). இராப்சன், ஈ.ஜே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tc4b6hz6/MLA
"இராப்சன், ஈ.ஜே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tc4b6hz6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment